மின்சார வாரியத்திலுள்ள ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய கோருவது சம்பந்தமாக இன்று சென்னை தலைமை செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சரிடம் கடிதம் அளிக்கப்பட்டது

 


மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம் தொடர்பாக மின்சார வாரிய தொமுச சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இது தொட‌ர்பாக திருப்பூர் மத்திய மாவட்ட திமுகழக செயலாளரும்,

திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஒப்பந்த தொழிலாளர்களின் ஒப்பற்ற தோழர் மதிப்பிற்குரிய அண்ணன் க. செல்வராஜ். எம் . எல் . ஏ  அவர்களிடம்   கோரிக்கை வைக்கப்பட்டது அவர் இது தொடர்பாக துரிதமாக திறம்பட செயல்பட்டு ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக விரிவாக கடிதம்   வாயிலாக மின்சாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு கடிதம் ஒன்றை மின்சார வாரிய தொமுச செயலாளர் ஈ.பி. அ.சரவணன் கொடுத்தார் அந்த கடிதம் இன்று சென்னை தலைமை செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் அவர்களை இன்று நேரடியாக சென்று திருப்பூா் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கொடுத்து அனுப்பிய கடிதத்தை மாண்புமிகு அமைச்சரிடம் அளிக்கப்பட்டது அப்போது பேசிய அமைச்சர் எதிர் வரும் 13 ம் தேதி இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் அதன் தொடர்ச்சியாக நடைபெறும் சட்டமன்ற கூட்ட தொடரில் மின்சார வாரிய மானிய கோரிக்கையின் போது ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் ஒப்பந்த தொழிலாளர்களின் பணிநிரந்தரம் தொடர்பான கோரிக்கையை நினைவேற்ற விரைவாக செயல்பட்ட திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் க. செல்வராஜ்  எம். எல். ஏ அவர்களுக்கு நெஞ்சார்ந்த  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது. 


கடந்த கழக ஆட்சியில் முன்னாள் முதல்வர் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் பொற்கால ஆட்சியில் 21,600 ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யப்பட்டனர். ஆட்சி மாற்றம் காரணமாக கடந்த 2011 ம் ஆண்டில் இருந்து எந்தவொரு ஒப்பந்த தொழிலாளர்களையும் பணிநிரந்தரம் செய்யவில்லை என்ற காரணத்தால் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டுமென நமது திருப்பூர் மின்சார வாரிய தொமுச சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வெற்றி பெற்ற பிறகும் பணிநிரந்தரம் வழங்கவில்லை இது தொட‌ர்பாக நமது திருப்பூா் மின்சார வாரிய தொமுச சார்பில் கடந்த அதிமுக ஆட்சியில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் வாயிலாக வலியுறுத்தியும் அப்போது இருந்த அதிமுக அரசு மெத்தனமாக இருந்து ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை என்பதால் ஒப்பந்த தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

திருப்பூர் மின்சார வாரியத்தில் வயர்மேன், போர்மேன், பொறியாளா், உதவியாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளது. திருப்பூர் பகுதிகளிலுள்ள மின்சார வாரிய அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 450-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஒருங்கிணைப்புகுழு  அமைத்து பல ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்து வரும் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணிநிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

          அதிமுக அரசின் தவறான முடிவால் மின்சார வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிநிரந்தரம் செய்யாமல் தொடர்ந்து பணிபுரிந்து வரும் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பணிநிரந்தரம் செய்ய வழிவகுக்க வேண்டும்.

          திருப்பூா் பகுதிகளில் இது வரை 45 தொழிலாளர்கள்  மின்சார பணிகளின் போது மின் விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட மற்றும் இறந்த ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவும், மின்சார வாரியத்தில் மற்ற பிரிவு பணியாளர்களை விட ஒயர் மேன் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை பழுது நீக்கம், பராமரிப்பு, கண்காணிப்பு மற்றும் தெரு விளக்குகள் பராமரிப்பு ஆகிய பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். திருப்பூர் பகுதிகள் உட்பட மின்சார வாரியத்தில் காலி பணியிடங்கள் சுமார் 48,000க்கு மேல் உள்ளது 20,000க்கும் மேற்பட்ட களப்பணி காலி பணியிடங்கள் 10  ஆண்டு காலமாக இருந்து வருகிறது.  மின்சார வாரிய அன்றாட பராமரிப்பு பணிகளுக்கு பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. களப்பணி காலி பணியிடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநியமனம் செய்ய நடவடிக்கை எடுத்தால், நலமானதாக இருக்கும் என்பது எனது அன்பான வேண்டுகோள் ஆகும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்