ராணிப்பேட்டை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக தேஷ்முக் சேகர் சஞ்சய் பொறுப்பேற்றுக் கொண்டார்

 



ராணிப்பேட்டை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக தேஷ்முக் சேகர் சஞ்சய் நேற்று காலை சுமார் 10 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்

  இவர் 2012ஆம் ஆண்டு ஐபிஎஸ் முடித்து தற்போது தஞ்சாவூரில் பணியாற்றி வந்தார்   ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஓம்பிரகாஷ் மீனா சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் இதனைத்தொடர்ந்து நேற்று ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்ட தேஷ்முக் சேகர் சஞ்சய் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது

 பொதுமக்களின் குறைகள் எதுவாக இருந்தாலும் அதனை  தீர்க்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், சட்டத்துக்குப் புறம்பான குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார், மேலும் அவர் பேசிய போது, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, குற்றம் நடக்கும் இடங்களை குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்  பத்திரிகையாளர்கள் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் எங்கெல்லாம்  நடக்கிறதோ அதனைக் குறித்து தகவல் அளிக்கும்படி கேட்டுக் கொண்டார் உங்களுடைய ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் கூறினார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்