கொரோனா விதிகளைமீறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் .

 ஆற்காட்டில் கட்சிக்கொடிமற்றும் கையிறை அறுத்துச்சென்ற மர்ம நபர்களை கைது செய்யக் கோரி   முக்க்கவசம்  சமூக இடைவெளியின்றி ,       அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்நடத்தினர்.

 அதிமுக மாநில  அவைத்தலைவர்மதுசூதனன்  மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதத்தில் தமிழகத்தில்  அதிமுக வினர் கட்சிக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டுள்ளனர் . அதன் அடிப்படையில் இராணிப்பேட்டை மாவட்டம்ஆற்காட்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில்உள்ள கம்பத்தில் அதிமுக கொடி   அரைக்கம்பத்தில்  ஏற்றி பறக்க விடப்பட்டு இருந்தது.


இந்நிலையில் மர்ம நபர்கள்,  அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்த  கொடி மற்றும் கயிற்றினை  கழற்றி சென்றுள்ளனர்அதனைக்கண்ட  அதிர்ச்சியில்  அதிமுகவினர்ஆற்காடு நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 மேலும் சம்பவம் குறித்து தவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரான ரவி தலைமையில் நூற்றுக்கும். மேற்பட்டதிமுகவினர் நடந்த சம்பவத்தைக் கண்டித்தும் காவல்துறையினர் விரைந்து   மர்மநபர்களை கைது செய்யவேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர் 

 ஆர்ப்பட்டத்தின்போது காவல்துறையினர் அதிமுவினரை முக்க்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி எச்சரிக்கை  செய்தனர் அவற்றை மீறி ஒன்றுகூடி  அதிமுகவினர் சமூக இடைவெளி போன்ற கொரோனா விதிகளை மதிக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனவே  நோய்த்தொற்று பரவல் ஏற்பட்ட கூடிய சூழல் நிலைவியதால் அப்பகுதியில்  பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும்  அதிருப்தி ஏற்பட்டது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)