பீர் பாட்டிலை கையில் வைத்துக் கொண்டு பொதுமக்களையும் வாகனத்தையும் அச்சுறுத்திய மூன்று வாலிபர்கள் கைது


 காவேரிப்பாக்கம் அருகே ஒச்சேரியில் கையில் பீர் பாட்டிலை வைத்துக் கொண்டு பொதுமக்களையும் வாகனத்தையும் அச்சுறுத்திய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்

சென்னை அல்லிக்குளம் மூர்மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த ஆதம் என்பவரின் மகன் தாஸ் என்கிற ஆதிபகவன் வயது 27என்பவரும், விருதாச்சலம்  பழமலை நாதர் 1வது தெருவை சேர்ந்த காமராஜ் என்பவரின் மகன் கந்தவேல் என்கிற சப்பை வயது 21 என்பவரும்

 சென்னை வண்டலூர் காமராஜர் தெருவை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் பிரகாஷ் வயது 19 இந்த மூன்று பேரும் ஒன்று சேர்ந்து ஓச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிலையம் அருகே கையில் பீர் பாட்டிலை வைத்துக் கொண்டு 

அங்கு வந்து செல்லும் பொது மக்களையும் வாகனங்கயும்  அச்சுறுத்தும் வகையில் தங்கள் ரவுடியை போல பாவித்து தகராறில் ஈடுபட்டு வந்தனர் தகவலறிந்த அவளூர் போலீசார் உதவி ஆய்வாளர் ஏழுமலை  மற்றும் எஸ் எஸ் ஐ ரவி ஆகியோர் 

தகராறில்  ஈடுபட்டுக்கொண்டிருந்த மூவரையும் காவல் நிலையம்  அழைத்து வந்து இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.