திடீர் வீடியோகால்.. பெண்ணின் நிர்வாண வீடியோ.. சிக்கும் ஆண்கள் - இப்படியும் இண்டர்நெட் மோசடி!

 தொழில்நுட்பம் மூலம் நாளுக்கு நாள் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சைபர் கிரைம் போலீசாரும், வங்கிகளும் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் பல வழிகளிலும் மோசடி அரங்கேறி வருகிறது. மோசடியை ஒழிக்க வேண்டுமென்றால் பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதே ஒரே வழி என்பதுதான் உண்மையும் கூட. பேஸ்புக்கில் தெரிந்த நண்பர் போல கணக்கு தொடங்கி பண உதவி கேட்பது, வங்கியில் இருந்து தொலைபேசியில் பேசுவதைப்போல வங்கிக்கணக்கை தெரிந்துகொண்டு பணத்தை திருடுவது என டிஜிட்டல் திருட்டு தொடர்கிறது. அப்படி தமிழகத்தில் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள மோசடி செக்ஸ் வீடியோ மிரட்டல். சோஷியல் மீடியா பயன்படுத்துபவர்களை குறி வைத்து நடத்தப்படும் இந்த மோசடியில் சென்னையிலேயே பலர் சிக்கியுள்ளனர். 



Internet Honey Trap | திடீர் வீடியோகால்.. பெண்ணின் நிர்வாண வீடியோ.. சிக்கும் ஆண்கள் - இப்படியும் இண்டர்நெட் மோசடி!


சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ கால் வருகிறது. அந்த செல்போன் நம்பரின் டிபியில் பெண் புகைப்படம் இருக்கிறது. திடீரென அட்டண்ட் செய்ய அந்தப்பக்கம் நிர்வாணமாக ஒரு பெண் வீடியோவில் வருகிறார். என்ன ஏது என்று அவர் உஷாராவதற்குள் வீடியோ கால் துண்டிக்கப்படுகிறது. அதன் பின்னர் வீடியோ கால் பதிவு செய்யப்பட்டதாகவும், அதனை சோஷியல் மீடியாவில் பரப்ப வேண்டாம் என்றால் பணம் வேண்டும் என்றும் மிரட்டல் வருகிறது. அந்த வீடியோவை சக நண்பர்களுக்கும் டேக் செய்துவிடப்படும் என மிரட்டப்படுகிறது. இந்த மிரட்டலுக்கு பயந்து  சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த நபர் ரூ.17 லட்சம் அனுப்பியுள்ளார். இதுதான் இந்த மோசடியின் திட்டம். 


இந்த கொரோனா காலத்தில் அதிகமானவர்கள் இணையத்தை பயன்படுத்தி வரும் நிலையில் மோசடிக் கும்பல் அவர்களையே குறி வைக்கிறது. இணையத்தில் சுற்றுபவர்களை பொரி வைத்து பிடிக்கும் கும்பல் அவர்களிடம் இருந்து பணத்தை கறக்கத் தொடங்கியுள்ளது.  இந்த பொறியில் சென்னையில் மட்டும் 30-க்கும் அதிகமானவர்கள் இந்த ஆண்டில் சிக்கியுள்ளனர். பிராட்வேவைச் சேர்ந்த ஒரு மருத்துவர்,  நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர், தாம்பரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் என பலரும் ரூ.19 லட்சத்துக்கும் அதிகமாக இழந்துள்ளனர்.



Internet Honey Trap | திடீர் வீடியோகால்.. பெண்ணின் நிர்வாண வீடியோ.. சிக்கும் ஆண்கள் - இப்படியும் இண்டர்நெட் மோசடி!


இந்த மோசடிக்கும்பல் இன்ஸ்டா, பேஸ்புக், வாட்ஸ் அப் என அனைத்து தளத்தையும் மோசடிக்கு பயன்படுத்துகிறது. திடீரென்று வரும் வீடியோகால் குறித்து உஷார் ஆவதற்குள் வீடியோ ரெக்கார்ட் செய்வது பொரியில் சிக்குபவருக்கு தெரிவதில்லை. இந்த விவகாரம் குறித்து அனைவரும் போலிசாரிடம் புகார் அளிப்பதில்லை. இது வெளியே தெரியக்கூடாது என பயப்படும் நபர்கள் பணத்தை இழக்கிறார்கள்.இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் குறிப்பாக வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். லாக் அவுட் செய்யப்படாத சோஷியல் மீடியா அக்கவுண்ட்கள் மூலமும், சோஷியல் மீடியாவின் ஆபாச பக்கங்களில் கமெண்ட் லைக் செய்யும் நபர்கள் என இவர்கள் வலையில் சிக்குகின்றனர்.


பாதுகாப்பாக இருப்பது எப்படி? 

  • தெரியாத எண்ணில் இருந்து வீடியோகால் வந்தால் தவிர்க்க வேண்டும்
  • இணையம் எதையுமே மன்னிக்கவோ, மறக்கவோ செய்யாது. நீங்கள் இணையத்தில் எந்த விதத்திலும் தவறான பாதையை தேர்ந்தெடுத்தால் அது உங்களுக்கே எதிராக அமையலாம்
  • சோஷியல் மீடியாவில் நண்பர்கள் கிடைப்பது சாதாரண விஷயமே. ஆனால் அவர்களின் எல்லையை புரிந்து நடந்துகொள்ள வேண்டும். யாராவது அதிக நெருக்கத்தை காட்டினால் உஷாரகிவிடுங்கள்


Internet Honey Trap | திடீர் வீடியோகால்.. பெண்ணின் நிர்வாண வீடியோ.. சிக்கும் ஆண்கள் - இப்படியும் இண்டர்நெட் மோசடி!

  • எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் இணையத்தில் அந்தரங்க வீடியோக்களை அனுப்புவதை தவிருங்கள். செல்போனில் அந்தரங்க வீடியோ , புகைப்படம் எடுப்பதையும் தவிர்ப்பது நல்லது
  • எதாவது மர்மமான வித்தியாசமான மின்னஞ்சல் தேடி வந்தால் அதனை புறக்கணிக்க வேண்டும். தேவையில்லாத வெப்சைட்டுகளை தொடவேகூடாது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்