பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என எச்சரித்த நீதிமன்றம். அலறி அடித்து ஆஜரான திமுக முக்கிய அமைச்சர்கள்.

 

2005 ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின் போது, கே.கே நகர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்குச்சீட்டுகளை பிடுங்கி சென்றதோடு பொது சொத்தை சேதப்படுத்தியதாக பதியபட்ட வழக்கில் சாட்சி விசாரனைக்காக செப்டம்பர் 24ம் தேதிக்கு சிறப்பு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

The court warned that the  would be issued arrest warrant. DMK  ministers who screamed and appearing in court.

2005 ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின் போது, கே.கே நகர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்குச்சீட்டுகளை பிடுங்கி சென்றதோடு பொது சொத்தை சேதப்படுத்தியதாக பதியபட்ட வழக்கில் சாட்சி விசாரனைக்காக செப்டம்பர் 24ம் தேதிக்கு சிறப்பு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

கடந்த  2005 ம் ஆண்டு உள்ளாட்சி இடைத்தேர்தலின் போது சென்னையில் 131 வது வார்டுக்கு உட்பட்ட கே.கே நகர் பள்ளி ஒன்றில் புகுந்து தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அத்துமீறி உள்நுழைந்து வாக்குச்சீட்டுகளையும், முத்திரைகளையும் பிடுங்கி சென்றதாகவும், அங்கு அதிமுக சார்பில் தேர்தல் ஏஜெண்டாக பணிபுரிந்த சந்தோஷ் தனது காரில் துரத்தித் சென்ற போது தற்போதைய ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ அனபரசன் தூண்டுதலின் பேரில், தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 24 பேர் சேர்ந்து சந்தோஷின் காரை சேதப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டடது. 

இந்த புகார் தொடர்பாக கே.கே நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக அமைச்சர் தா.மோ அன்பரசன் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோரை நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, குற்றச்சாட்டு பதிவிற்கு அமைச்சர்கள் நேரில் ஆஜராக தவறும் பட்சத்தில், பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என நீதிபதி எச்சரித்தார்.

இன்று நீதிபதி அலிசியா முன்பு  விசாரணைக்கு வந்த போது, இன்று காலை குற்றச்சாட்டு பதிவுக்கு நேரில் ஆஜராகாத அமைச்சர்கள் தா.மோ அன்பரசன் மா.சுப்பிரமணியனுக்கு  சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் பிற்பகலில் அமைச்சர்கள் தா.மோ அன்பரசன் மற்றும் மா.சுப்பிரமணியன் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அலிசியா முன்பு ஆஜராகினார். பின்னர் சாட்சி விசாரணைக்காக வழக்கு விசாரணையை செப்டம்பர் 24ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்