பெண்கள் குளிப்பதை பார்க்க வெப் கேமிரா பொருத்திய முன்னாள் போலீசின் மகன் கைது...!
தஞ்சாவூர் தெற்குவீதியில் வசிக்கும் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றின் உதவியாளரான வெங்கடேஷ் திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி இவரது வீட்டின் குளியலறையின் மேல ஏதோ சிகப்பு நிறத்தில் மின்னுவது போல் இருப்பதை பார்த்த வெங்கடேஷின் மனைவி, தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக குளியலறைக்கு சென்று பார்த்த போது, பாத்ரூமிற்கு ஜன்னல் பகுதியில் பார்த்ததில் மரக்குச்சி ஒன்றில் வெப் கேமராவை கட்டி ஜார்ஜ் இறங்காமல் இருப்பதற்காக பவர் பேங் இணைத்து அதனை பிளக் பாயிண்டில் இணைத்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தஞ்சாவூர் மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வெங்கடேஷின் வீட்டின் அருகில் வசிக்கும் நசீர் அகமது (35) என்பவரை கைது செய்தனர். நசிர் அகமதுவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வெங்கடேசன் வீட்டின் அருகில் வசிக்கும் நசீர் அகமது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அங்கன்வாடியில் வேலை செய்து வருகிறார். அவர்களுக்கு ஆறு வயதில் பெண் குழந்தை உள்ளது. நசீர் அகமதுவின் அப்பா முகமது இக்பால் காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.
இதற்கு சில நாட்களுக்கு முன் நசீர் அகமது அவர் வீட்டு மாடியில் நின்று கொண்டு,
வெங்கடேஷின் வீட்டிற்கும் நசீர் அகமது வீட்டுக்கும் நடுவில் ஒரு வீடு உள்ளது. காலியாக உள்ள அந்த வீட்டை வாடகைக்கு கேட்டு வந்தால் காண்பிப்பதற்காக அந்த வீட்டு உரிமையாளர் சாவியை நசீர் அகமது வீட்டில் கொடுத்து வைத்திருந்தார். அதனை பயன்படுத்தி கொண்ட நசீர் அகமது அந்த வீட்டு ஜன்னலில் இருந்த கண்ணாடியை அகற்றி எடுத்து விட்டு அதன் வழியாக ஒரு அடி தூரத்தில் இருந்த வெங்கடேசனின் வீட்டு ஜன்னலில் மரக்குச்சி ஒன்றில் கட்டி வெப்கேமரா வைத்துள்ளார். கேமரா ஆப் ஆகாமல் இருப்பதற்காக அதனுடன் பவர் பேங்கையும் இணைந்து எந்நேரமும் சார்ஜ் ஏறக்கூடிய வகையில் செட்அப் செய்து வெங்கடேஷின் வீட்டில் உள்ளபெண்கள் குளிப்பதை பார்த்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி இரவு ஏழு மணியளவில் குளிக்க சென்ற வெங்கடேஷன் மனைவி ஜன்னலில் சிகப்பு மற்றும் பச்சை நிற லைட் எரிவதைப் பார்த்து, கணவனிடம், கூறியதால் தற்போது இவை தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்து போலீஸில் புகார் அளித்ததின் பேரில், நசீர் அகமதுவை போலீசார் கைது செய்ததுடன் பாத்ரூமில் வைக்கப்பட்டிருந்த கேமரா, பவர் பேங்க் மற்றும் மெமரி கார்டு ஆகிவற்றைக் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் நசீர்அகம்மது இது போல் வேறு யாரையாவது படம் பிடித்துள்ளாரா, குளிக்கும் படங்களை வேறு யாருக்கேனும் அனுப்பியுள்ளரா அல்லது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துள்ளாரா என விசாரித்து வருகின்றனர்.