பராமரிப்பு இல்லாத இருட்டறை சிட்டி யூனியன் பேங்க் ஏடிஎம்

 


ராணிப்பேட்டையில் சிட்டி யூனியன் வங்கி  கிளை செயல்பட்டு வருகிறது இந்த வங்கியின் கட்டுப்பாட்டில்  ராஜேஸ்வரி மருத்துவமனை, எதிரே உள்ள கட்டிடத்தில் ஏடிஎம் மிஷன் வைக்கப்பட்டுள்ளது,  ஏடிஎம் வைக்கப்பட்டிருக்கும் அறை, சரியாக பராமரிக்கப் படுவதில்லை என்று அங்கு வந்து செல்லும்  பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் 

 


மிஷன் உள்ள அறையில் மின் பல்புகள் எரியவில்லை, இரவு நேரங்களில் இருளடைந்து காணப்படுகின்றது,  பழைய ஏடிஎம் மெஷின் வைக்கப்பட்டுள்ளது மிஷினிலுள்ள திரைகள் சரிவர செயல்படவில்லை இதனால் பணம் எடுப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம் என்றனர்  மேலும்  அறையில் உள்ள ஏசி சரிவர வேலை செய்யவில்லை ஏசியில் இருந்து தண்ணீர் ஒழுகிக்  கொண்டே இருப்பதால் அறையில்  குளம்போல் தண்ணீர்  தேங்கி நிற்கின்றது மின் இணைப்பு போர்டுகள் உடைக்கப்பட்டு மின் கசிவு ஏற்படும் அபாய நிலை உள்ளது, இப்படி எந்தப் பராமரிப்பும் இல்லாமல் செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் ஏடிஎம் அறையை வங்கி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்