வாலாஜா வள்ளுவம் பாக்கம் கிராமத்தில் கருத்தம்மன் கோவிலில் ஆடித்திருவிழா

 


வாலாஜா  அடுத்த  வள்ளுவம் பாக்கம் கிராமத்தில் கிராம தேவதை  கருக்காத்தம்மன் ஆடி மாதத் திருவிழா வெகு விமர்சையாக  நடைபெற்றது. 

 இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு அம்மனுக்கு 108 பால்குடம் சுமந்து ஊர்வலமாக  எடுத்து வந்துஅம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். 

அபிஷேகத்திற்கு பிறகு அம்மனுக்கு அலங்காரம் செய்து சிறப்பு தீப ஆராதனை நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து மேலும் அம்மனுக்கு கூழ்வார்த்தல்  மற்றும் பொங்கலிட்டு அம்மனுக்கு படையல் செய்து ஊர் பொதுமக்கள்  சாமி தரிசனம் செய்தனர். இரவில் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது.