நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பொது நல சங்கம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கினார்

 


75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பொது நல சங்கம் சார்பாக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் ராணிப்பேட்டை   மாவட்டசெயலாளர்  சசிகுமார்  தலைமையில் வாட்டர் ஹீட்டர்-1, பெரிய ஸ்ட்ரக்சரர்-2 போன்ற மருத்துவ உபகரண பொருட்களை மருத்துவமனை கண்காணிப்பாளர் உஷா நந்தினியிடம் வழங்கினர்

 இதனைத் தொடர்ந்து மருத்துவ வளாகத்தில் உள்ள பூங்காவில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர் மேலும் 30க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் ரத்த தானம் வழங்கினர்

இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் மாநில பொருளாளர் கே.மூர்த்தி

 


மாநில சமூகநல செயலாளர் தினபுரட்சி ராஜேந்திரன்,மாவட்ட பொருளாளர் ஆர் சிவகுமார், மாவட்ட ஆலோசகர் கணேசன், மாவட்ட சமூக நல செயலாளர் எஸ்.எம் முகமது அலி ,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி அருள், மாவட்ட இணைச்செயலாளர் சுரேஷ்,

 


மாவட்ட சமூக நல இணைச் செயலாளர் நடராஜன், ரத்த வங்கி மெடிக்கல் ஆபீஸர் டாக்டர் சுஜிதா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.