அதிசயம்… வாகை மரத்தில் இருந்து தானாக பீச்சியடித்த தண்ணீர் : செல்பி எடுக்க குவிந்த மக்கள்!!

  


மரத்திலிருந்து பீய்ச்சி அடித்த தண்ணீரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தது மட்டுமல்லாமல் பாத்திரங்கள், குடம் மூலம் தண்ணீரை பிடித்து சென்றனர்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வேல்முருகன் நகர் பகுதியில் உள்ள மரம் ஒன்றில் இருந்த சிறிய துளைகளில் இருந்து இன்று மதியம் ஒரு மணி அளவிற்கு திடிரென தண்ணீர் பீய்ச்சி அடித்துகொண்டு வெளிவந்தது.

இதனை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள குடங்கள் மற்றும் பாத்திரங்களில் நீரை பிடித்துசென்றனர். சுமார் 45நிமிடமாக தண்ணீர் குழாயில் வெளியேறுவது போல தண்ணீர் வெளியானதால் அதனை பொதுமக்கள் வியப்புடன் பார்த்துசென்றனர்.

மேலும் அந்த பகுதியில் சென்ற இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் தண்ணீரை கைகளில் பிடித்து குடித்துசென்றதோடு ஆர்வமுடன் புகைப்படங்களை எடுத்தனர். தொடர்ச்சியாக மழை பெய்து வந்த நிலையில் மரத்தினுள் உள்ள வெற்றிடத்தில் தண்ணீர் நீரம்பி வெளிவந்திருக்கலாம் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.