காவல்துறையில் முதன்முதலாக காவலர்கள் டிரான்ஸ்பர் கமிட்டி: சென்னை காவல் ஆணையர்

 


சென்னையில் பொதுவாக இரண்டாம் நிலை காவலர் தொடங்கிஉதவி ஆய்வாளர் வரையிலான காவலர்கள் டிரான்ஸ்பர் மற்றும் குறிப்பிட்ட பகுதிக்கு பணியிடமாற்றம் ஆகியவற்றிற்கான விருப்ப மனுவை சம்பந்தப்பட்ட காவல் மாவட்ட இணை ஆணையரிடமும்இன்ஸ்பெக்டர் முதல் உதவி ஆணையர் வரையிலான காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் விருப்ப மனுவை டிஜிபி அலுவலகத்திலும் வழங்குவது வழக்கம்.

இது போன்ற பணியிடமாற்றங்களுக்கு சில காவல் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு பணியிட மாற்றம் செய்வதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இது போன்ற சூழல்கள் காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்துவது மட்டுமின்றி பணம் கொடுக்கும் காவலர்களுக்கு மட்டுமே டிரான்ஸ்பர் கிடைக்கும் என்ற நிலையும்நியாயமாக டிரான்ஸ்பர் கேட்ட காவலர்களுக்கு அது கிடைக்காமல் போகும் நிலைமையும் ஏற்பட்டது.

இது போன்ற சூழலை தவிர்ப்பதற்காக பிரத்யேக கமிட்டி ஒன்றை அமைத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்  உத்தரவிட்டுள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், "சென்னை காவல் மாவட்டம் மற்றும் மண்டலங்களுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் இரண்டாம் நிலை காவலர் முதல் உதவி ஆய்வாளர் வரை பணியிட மாற்றம் செய்வதற்காக அந்த காவல் மாவட்ட இணை ஆணையர் தலைமையில் துணை ஆணையர் மற்றும் 3 உறுப்பினர்கள் கமிட்டியில் செயல்பட உள்ளனர்.

அதேபோல் மத்தியக் குற்றப்பிரிவு அலுவலக பணியிட மாற்றம் செய்ய மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் தலைமையில் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர்கள் மற்றும் 2 உறுப்பினர்கள் செயல்படுவார்கள் எனவும் நுண்ணறிவு பிரிவுக்காக சீனியர் நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் தலைமையில் துணை ஆணையர்கள் பணியிட மாற்றத்திற்கான பணியை செய்து, உத்தரவை கூடுதல் ஆணையர் உத்தரவை வெளியிடுவார்.

அதேபோல் கட்டுப்பாட்டு அறையில் பணியிட மாற்றம் தொடர்பான உத்தரவை கூடுதல் ஆணையர் தலைமையகம் மற்றும் மத்திய குற்றப்பிரிவு ஆகியோர் பணியிட மாறுதலுக்கான உத்தரவை பிறப்பிப்பார்.

கூடுதல் ஆணையர் தலைமையிடம்உறுப்பினர்கள்துணை ஆணையர் நிர்வாகம்ஆயுதப்படை 1, ஆயுதப்படை 2 துணை ஆணையர்கள் மற்றும் 3 உறுப்பினர்கள் ஆயுதப்படை பிரிவில் பணியிட மாறுதல் உத்தரவை கவனிப்பார்கள்.  அதே போல மண்டல இட மாற்றங்கள் சட்டம் ஒழுங்குபோக்குவரத்து காவலர்களுக்கான பணியிட மாற்ற உத்தரவை நியமிக்கப்பட்ட கூடுதல் ஆணையர் பிறப்பிப்பார்.

காத்திருப்போர் பட்டியலில் உள்ள காவலர்கள் கூடுதல் ஆணையர் தலைமையிலான குழு பட்டியல் தயாரித்து தலைமையிட கூடுதல் ஆணையருக்கு அனுப்புவர், கூடுதல் ஆணையர் பட்டியல் அதனை வெளியிடுவார்.

காவல் ஆய்வாளர்உதவி ஆணையர்கூடுதல் துணை ஆணையருக்கான பணியிட மாற்ற உத்தரவு பட்டியலை சீனியர் கூடுதல் ஆணையர்உறுப்பினர்கள் கூடுதல் ஆணையர்கள்துணை ஆணையர் நுண்ணறிவு பிரிவு தயாரித்து காவல் ஆணையருக்கு அனுப்பப்பட்டு வெளியிடப்படும்.

குறிப்பாக ஒரு வருடம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்களுக்கு மட்டுமே பணியிட மாற்றம் செய்யப்படும்.  உடல் நிலைமருத்துவம் போன்ற காரணங்களுக்கு மட்டுமே காவலர்கள் 1 வருடத்திற்குள்ளாக பணியிட மாற்றம் கேட்டு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் இரண்டாம் நிலை காவலர் முதல் உதவி ஆய்வாளர் வரையிலான காவலர்கள் அனுப்பியுள்ள பணியிட மாற்ற விண்ணப்ப மனுக்களை மாதந்தோறும் முதல் புதன்கிழமை நியமிக்கப்பட்ட அதிகாரிகள் பரிசீலனை செய்வர். அதேபோல் காத்திருப்போர் பட்டியல் காவலர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் முதல் கூடுதல் துணை ஆணையர்கள் வரையிலான பணியிட மாற்ற கமிட்டி மாதந் தோறும் 1 மற்றும் 16 ஆம் தேதி செயல்படும்.

குறிப்பாக துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட காவலர்கள் பணியிட மாற்றத்திற்கு அப்ளை செய்தால் அதை கருத்தில் கொள்ள வேண்டாம்இந்த கமிட்டி நடைமுறை உடனடியாக அமலுக்கு வரும்" என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)