பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடூரம் சிவகங்கையில் அரங்கேறிய கொடூரம்

 


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர் ராஜா. திருமண சுபநிகழ்வுகழ்வுகளுக்கு வரவேற்பு நிகழ்வுகளுக்கு சிறுமிகள், இளம்பெண்களை அழைத்து செல்லும் தொழில் செய்துவருகின்றார்.


இந்நிலையில் தான் ராஜா இது போன்ற நிகழ்வுகளுக்கு அழைத்து செல்லும் பெண்களை ஆசைவார்த்தை கூறி பாலியல் இச்சைக்கு பயன்படுத்துவதாக பகீர் புகார் ஒன்று முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ராஜா ஏழ்மை நிலையில் உள்ள பெண்களை குறிவைத்து வேலை கொடுப்பதாக கூறி பணத்தாசையை காட்டியுள்ளார்.

அத்துடன் இதுபோன்று வரும் பெண்களை மதுபோதைக்கு அடிமையாக்கி பல வி.ஜ.பிகளின் பாலியல் இச்சைக்கு பயன்படுத்திவருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சாக்கோட்டை காவல்நிலையத்தில் பணியாற்றும் தலைமைக் காவலர் மாயவதன் மற்றும் மணிகண்டன் என்ற இளைஞரும் இணைந்து இந்த வேலையை செய்துவருகின்றனர்.

ராஜாவால் பாதிக்கப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் பெண்களைத் தொடர்பு கொள்ளும் தலைமைக் காவலர் மாயவதன், ‘உங்களை முதல் குற்றவாளிகளாக சேர்த்துவிடுவேன்’ என்று மிரட்டுகிறார். இதுதொடர்பாக பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)