பொதுவெளியில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால் கடும் நடவடிக்கை – சென்னை மாநகராட்சி

 


சென்னை : ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பொது வெளியில்‌ நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்‌ அமைப்புகள்‌ மற்றும்‌ நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்‌ மீது நடவடிக்கை எடுக்கப்படும்‌ என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க பெருநகர சென்னை மாநகராட்சியின்‌ சார்பில்‌ காவல்துறையுடன்‌ இணைந்து பல்வேறு விதமான நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசின்‌ வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா வைரஸ்‌ தொற்றை கட்டுப்படுத்தும்‌ வகையில்‌ திருமணம்‌ உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில்‌ 50 நபர்கள்‌ மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்‌ எனவும்‌, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்‌ உள்ள ஹோட்டல்கள்‌, கல்யாண மண்டபங்கள்‌, விருந்து அரங்கங்கள்‌, சமூக நலக்கூடங்கள்‌ ஆகியவற்றில்‌ பதிவு செய்யப்படும்‌ திருமணம்‌ உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள்‌ குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு இணையதள இணைப்பின்‌ வாயிலாக தெரியப்படுத்த வேண்டும்‌ என மாநகராட்சியின்‌ சார்பில்‌ கூட்டங்கள்‌ நடத்தப்பட்டு உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருமணம்‌ போன்ற சுபநிகழ்ச்சிகளில்‌ கலந்து கொள்ளும்‌ அனைவரிடமும்‌ முகக்கவசம்‌ கட்டாயம்‌ அணிய வேண்டும்‌ எனவும்‌, நுழைவு வாயிலில்‌ கைகளை சுத்தம்‌ செய்யும்‌ கிருமி நாசினி திரவம்‌ வைத்து அனைவரின்‌ கைகளையும்‌ சுத்தம்‌ செய்து அனுமதிக்க வேண்டும்‌ எனவும்‌. நிகழ்ச்சிகள்‌ நடைபெறும்‌ பொழுது கலந்து கொள்பவர்கள்‌ அனைவரையும்‌ சமூக இடைவெளியுடன்‌ அமர வைக்கவும்‌ நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம்‌ மண்டப உரிமையாளர்கள்‌ அறிவுறுத்த வேண்டும்‌.

மேலும்‌, உணவு உண்ணும்‌ நேரங்களில்‌ தொற்று பரவும்‌ வாய்ப்பு அதிகம்‌ உள்ளதால்‌ கருக்கைகள்‌ அதிக இதுநாள்வரை திருமணம்‌ உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பதிவு செய்யப்பட்ட 2,812 மண்டபங்கள்‌ மற்றும்‌ ஹோட்டல்களில்‌ மாநகராட்சி வருவாய்துறை அலுவலர்களால்‌ கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 600 இடங்களில்‌ விதிமீறல்‌ கண்டறியப்பட்டு இதுவரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்‌ மற்றும்‌ மண்டப உரிமையாளர்களிடமிருந்து ரூ.229 இலட்சம்‌ அபராதம்‌ விதிக்கப்பட்டுள்ளது.

மேலும்‌, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ மே மாதம்‌ 2021 முதல்‌ இதுநாள்வரை கோவிட்‌ தொற்று தடுப்பு மற்றும்‌ பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள்‌ மற்றும்‌ தனிநபர்களிடமிருந்து ரூ.370 கோடி அபராதத்‌ தொகை வசூலிக்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)