மின்சார வாரிய பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மின்சார வாரிய தொமுச ஆட்சியரிடம் கோரிக்கை

 


கொரோனா நோய் தொற்று காலத்தில் தொடர்ந்து பணியாற்றி வரும் மின்சார வாரிய ஊழியர்கள், அலுவலர்கள், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட சிறப்பு முகாம் நடத்த வேண்டுவது சம்பந்தமாக இன்று திருப்பூா் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ( ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது ) அவர்களை மின்சார வாரிய தொ.மு.ச செயலாளர் ஈ.பி. அ.சரவணன் நேரில் சந்தித்து மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் இது தொட‌ர்பாக ஆட்சியருடன் கலந்து ஆலோசனை செய்து விரைவில் மின்சார வாரிய தொழிலாளர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்துவதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்ளடும் என தெரிவித்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது.

 தமிழ் நாட்டில் கொரானா நோய் தொற்று காலத்திலும் அனைத்து பகுதியிலுள்ள மக்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க இரவு பகலாக  தன்னுயிரையும் பாராமல் வெளியே சென்று பாடுபடும் மின்சார வாரிய ஊழியர்கள் ,ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

 திருப்பூர் பகுதி தொழில் நகரம் என்பதால் வெளிமாநில, வெளி மாவட்டத்தை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். என்பதால் அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியதில் இருந்து மின்சார வாரிய ஊழியர்கள், பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என அனைவரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து வருகிறார்கள்.

 கொரோனா என்ற கொடிய நோய் தாக்கப்பட்டு இதுவரை சுமார் 60 க்கும் மேற்பட்ட மின்சார வாரிய ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.

 கொரோனா நோய் தொற்று காலத்திலும் பொது மக்களுக்காக பணியாற்ற செல்லும் மின்சார வாரிய ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உடனடியாக தடுப்பூசி போட சிறப்பு முகாம் அமைத்து அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும்.

பொது மக்கள் மத்தியில் பணியாற்றும் மின்சார வாரிய தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள படி தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தபடுவதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.

 திருப்பூர் பகுதியில் பொது மக்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கும், குறிப்பாக மின்சார வாரிய வயர்மேன், ஒப்பந்த தொழிலாளர்கள் , கள உதவியாளர், கணக்கிட்டாளர், விநியோக பணியாளர்கள் போன்றோருக்கும் விரைவாக தடுப்பூசிகளை போட்டு 'பொதுமக்கள் ஊழியர்கள்' என இருபக்க ஆபத்தினை குறைக்கும் படியும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்க்கொண்டு வருகின்றது.

மின்சார வாரிய ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம்களை ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து திருப்பூர் மாவட்ட மின்சார வாரியத்திலுள்ள அனைத்து பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி போடுவதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டுமென  மின்சார வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கம்  சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)