கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு பிளாஸ்டிக் ஒழிப்பு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி

 


ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து ரோட்டரி சங்கங்கள் இணைந்து மாபெரும் கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும்  பிளாஸ்டிக் ஒழிப்பு மக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்   கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாகச் சென்றனர் இந்த நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் கிளாட்சன் புஷ்பராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார் 

அதனைத் தொடர்ந்து ரோட்டரி கிளப் சார்பாக ராணிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு  கூட்டம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.கிளாட்சன் புஷ்பராஜ்  கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்

 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபா சத்தியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக  பங்கேற்றனர் மாவட்ட ஆளுநர் நிர்மலா ராகவன் வாழ்த்துரை வழங்கினார் ஆர்டிஎன் சி.ஆர் சந்திரா பாய் மற்றும் ஆர்டிஎன்கே.பாண்டியன் சிறப்புரையாற்றினார்

 


இறுதியாக ராணிப்பேட்டை பாலாறு ரோட்டரி சங்கம் தலைவர் ஆர் டி என் வழக்கறிஞர் எம் ஜெயக்குமார் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மாவட்ட பப்ளிக் இமேஜ் சேர்மன்  ஆர்டிஎன்

 டாக்டர் பி.பரத்குமார் ஆகியோர் நன்றி உரையாற்றினார் மேலும் இந்த நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்