ஆற்காடு அருகே வரதட்சணை கேட்டு சரமாரியாக அடித்து பெண் கொடுமை

 


ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த காவேரிப்பாக்கம் கம்மாளர் தெருவை  சேர்ந்தவர் தனியார் டிரைவரான ஆறுமுகம் இவரது இளைய மகள் கஜலட்சுமி வயது 30 

கஜலக்ஷ்மிக்கும் ஆற்காடு் பிள்ளையார் கோயில் தெரு நாய்க்கன் தோப்பு காவனூர்  கூட்டுரோடு  பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (36) முன்னாள் ராணுவ வீரரான இருவருக்கும் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகின்றன இவர்களுக்கு 11 வயதில் தனுஷ்  மற்றும்8 வயதில் சேசு என்ற இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்

இந்நிலையில் அருண்குமார் தினம்தோறும் வீட்டிற்கு குடித்துவிட்டு வந்து மனைவி கஜலட்சுமியை துன்புறுத்தி வந்தார்.

 மேலும் திருமணத்தின் போது கஜலட்சுமியின் அப்பா ஆறுமுகம் தன் இளைய மகளுக்கு சுமார் 35 பவுன் நகையை சீதனமாக கொடுத்துள்ளார்

இதனையடுத்து அருண்குமார் அந்த நகை அனைத்துமே விற்று குடித்ததாக கூறப்படுகிறது  மேலும்  தற்போது எனக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரதட்சணை வாங்கி வர வலியுறுத்தி தினந்தோறும் துன்புறுத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் தனது பக்கத்து வீட்டில் உள்ள பெண்களிடம் பேசுவது பார்த்த அருண்குமார் இன்று அதிக அளவில் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து வீட்டை துடைக்க பயன்படுத்தும் பாம்பை இரும்பு மற்றும் பிரம்பால் பயங்கரமாக அடித்துள்ளார் இதில் கஜெலட்சுமி அடி தாங்க முடியாமல் சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்துள்ளார் பிறகு அவர் உடல் முழுவதும் ரத்தம் சிவந்த வண்ணம் மற்றும் கருப்பு காயங்களுடன் காணப்பட்டது

 இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காவேரிப்பாக்கத்திலுள்ள  கஜலட்சுமியின் குடும்பத்தாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர் அதன்  தகவலின்பேரில் ஆற்காடுக்கு விரைந்து வந்த குடும்பத்தினர் கஜேலட்சுமியை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு வாலாஜாபேட்டை  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்

மேலும் இது தொடர்பாக கஜலட்சுமி தன் கணவர் அருண்குமார்  என்னை துன்புறுத்தி அடித்த  புகாரின்  அடிப்படையில் வாலாஜா போலீசார்  ஆற்காடு காவல்  நிலையத்திக்கு தகவல் கொடுத்ததனர் அதன் பேரில் முன்னாள் ராணுவ வீரர் அருண்குமார் மீது புகார் அளிக்கப்பட்டது மேலும் ஆற்காடு போலீசார்  அவரது  வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ஆற்காடு அருகே வரதட்சணை மற்றும் சந்தேகமடைந்து மனைவியை சரமாரியாக தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)