அமைச்சர் ஆர் காந்தி நூறு சதவீத கொரோனா தடுப்பூசி வழங்குதல் நிறைவு பாராட்டு விழாவில் கலந்துகொண்டு மருத்துவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்

 வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்திலேயே முதல் முறையாக ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த உப்புபேட்டை கிராமத்தில் 100% சதவீதம் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தி  நிறைவு செய்ததை தொடர்ந்து பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு ஆற்காடு தொகுதி எம்எல்ஏ ஜேஎல்.ஈஸ்வரப்பன் மற்றும்   திமுக கிளைச் செயலாளர் மணி என்கிற சுப்பிரமணி தலைமை தாங்கினர்,வட்டார சுகாதார துறை மருத்துவர்

 சுரேஷ்பாபு ராஜ் முன்னிலை வகித்தார், அமைச்சர் ஆர் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் அவர் பேசியபோது

 தமிழ்நாட்டில் முதலமைச்சர் சிறப்பான ஆட்சி செய்து வருகிறார் நோய் தடுப்பு பணியில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி வருகிறார், இதன் அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளுக்கும்    கொரோனா தடுப்பூசி வழங்கி மக்களுக்கு செலுத்தி வருகின்றனர்.


மக்களைத் தேடி மருத்துவம் என்ற ஒரு சிறப்பான திட்டத்தையும் தொடங்கி மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று மருத்துவம் பார்த்து,மருந்து வழங்கி வருகின்றனர் மருத்துவர்கள் சிறப்பான முறையில் சேவை செய்து சாதனை புரிந்து வருகின்றனர் 

இவர்களை பாராட்டியாக வேண்டும் 13 தொகுதிகளில் ஆற்காடு தொகுதி உப்புபேட்டை  கிராமம் 100% கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் கிராமம் என்ற சிறப்பு பெயரை பெற்றுள்ளதுபாராட்டுகிறேன் என்று பேசி 

சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார் 


இந்த நிகழ்ச்சியில் திமுக ஆற்காடு மேற்கு ஒன்றிய செயலாளர் நந்தகுமார் ,துணைச் செயலாளர் தண்டபாணி துணைச் செயலாளர் ஆறுமுகம்,ஆற்காடு கிழக்கு ஒன்றிய செயலாளர் பாண்டுரங்கன்  மாவட்ட பிரதிநிதி கூராம்பாடி  விஜயரங்கன், 


மாவட்ட பிரதிநிதி ஜெயபிரகாஷ்,ஒன்றிய இளைஞரணி ஸ்ரீநாத்,மேலகுப்பம் கோபாலகிருஷ்ணன்,  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தயாளன், தாயனூர் மோகன், முன்னாள் செயலாளர் செல்வக்குமார், சக்திவேல், தினகரன், சுகாதாரத் துறைச் சார்ந்த கோபிநாத், ரவி,மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!