தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை!!

 


சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்கப்படும் என அரசு அறிவித்தது.

இந்நிலையில், பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் சுகாதாரத் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாணவர்களின் நலன் கருதி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவர் நவீத் விக், கொரோன சூழலில் வீட்டில் ஆன்லைன் மூலம் கற்கும் குழந்தைகள் வீட்டில் சோர்வாக இருந்தாலும், பள்ளிகளில் சேர்வதால் ஏற்படும் அபாயங்களைப் பார்ப்பது முக்கியம். நாம் நன்மை தீமைகளை எடைபோட வேண்டும். குழந்தைகளுக்கு வீட்டில் கற்கும் சூழல் பற்றி பேசும் நாம், நாம் அபாயங்களையும் பார்க்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)