அரசு ஊழியரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் – வழக்குபதிவு செய்ய உத்தரவு

 


கோவை மாவட்டம் ஒட்டர்பாளையம் கிராமத்தில் கோபிநாத் என்பவர் காலில், பட்டியல் இனத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் மன்னிப்பு கேட்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை அன்னூர் அடுத்த ஒட்டர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. பட்டியலின சமூகத்தை சேர்ந்த இவர், அப்பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் தண்டல்காரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கோபிநாத் என்பவர், தனது சொத்து விவரங்களை சரிபார்க்க கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலர்  கலைச்செல்வியிடம் அணுகி விபரங்களை அளித்துள்ளார். அப்போது முறையான ஆவணங்கள் இல்லை எனவும், சரியான ஆவணங்களை கொண்டு வரும்படி கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி கூறியதாக தெரிகிறது. இதனால் கோபிநாத் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், கலைச்செல்வியை தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் கூறப்படுகிறது. அப்போது அங்கிர்ந்த வி.ஏ.ஒ உதவியாளர் முத்துசாமி குறுக்கிட்டு அரசு அலுவலரிடம் தவறாக பேச வேண்டாம் என கூறியதாக கூறப்படுகிறது.



பட்டியலின அரசு ஊழியரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் – வழக்குபதிவு செய்ய உத்தரவு


அப்போது கோபிநாத் முத்துசாமியின் சாதியைச் சொல்லி, தகாத வார்த்தைகளில் பேசி ஊரில் இருக்க முடியாது என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும் பணியில் இருக்க வேண்டும் என்றால் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில், தனது செல்வாக்கை பயன்படுத்தி வேலையில் இருந்து நீக்கி விடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த  மிரட்டலுக்கு பயந்த முத்துசாமி அழுதபடி கோபிநாத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். மற்றவர்கள் தடுத்தும் தொடர்ந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். காலில் விழுந்த முத்துசாமியை ’என் மேலையும் தவறு உள்ளது. உன்மேல எனக்கு கோபம் இல்லை. மன்னித்து விட்டேன் எழு. ஒன்னும் பிரச்சனை இல்லை’ என கோபிநாத் சொல்லி உள்ளார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)