மாற்றுத்திறனாளி காணாமல் போனார் தகப்பனார் போலீசில் புகார்
காவேரிபாக்கம் அடுத்த மேலபுலம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவருடைய மகன் சந்திரசேகர் வயது 27 இவர் பிறவியிலேயே வாய் பேச முடியாத, காது கேட்காத,மாற்றுதிரணாலி இவர் பிகாம் முடித்துவிட்டு பெங்களூரிலூரிலுள்ள அசென்டர் என்ற தனியார் கம்பெனியில் கடந்த இரண்டரை வருடங்களாக வேலை பார்த்து வந்தார்
தற்போது கொரோனா என்பதால் கடந்த ஒரு வருடமாக வீட்டிலேயே ஆன்லைன் மூலம் வேலை செய்து வந்துள்ளார் மேலும் இவருக்கு ஆன்லைனில்
சூதாட்டம் ஆடும் பழக்கம் இருந்திருக்கிறது சூதாட்டத்தல் கடன் அதிகமான நிலையில் கடந்த 11. 8 .21 ஆம் தேதியன்று விடியற்காலை சுமார் 5:30 மணி அளவில்
வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை இவரை உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடு, இப்படி பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இவரின் தகப்பனார் கோபாலகிருஷ்ணன் அவளூர் காவல் நிலையத்தில் தன் மகனை கண்டுபிடித்து தர புகார் மனு அளித்தார்
புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ்சார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.