அரசு பேருந்து நடத்துனரின் கண்ணத்தில் ‘பளார்’ : வட மாநில இளைஞரை அடித்து துவைத்த பயணிகள்!!பல்லடத்தில் அரசு நகர பேருந்து நடத்துனரை கஞ்சா போதையில் கண்ணத்தில் அடித்த வடமாநில இளைஞரை பிடித்து பயணிகள் காவல்துறையில் ஒப்படைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து பல்லடம் நோக்கி 7ம் நம்பர் அரசு நகர பேருந்து வழக்கம் போல் இயங்கி கொண்டிருந்து. இன்று சின்னக்கரை பேருந்து நிறுத்தத்தில் வடமாநில இளைஞர் ஒருவர் ஏறியுள்ளார்.

அவர் அருள்புரம் செல்கிறேன் என்று நடத்துனரிடம் டிக்கெட் வாங்கியுள்ளார் அருள்புரம் நிறுத்தம் வந்தவுடன் அந்த வடமாநில இளைஞர் இறங்காமல் பேருந்தில் பயணித்துள்ளார். இதனை கண்ட நடத்துனர் ஏன் இறங்கவில்லை எங்கு செல்லவேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த இளைஞன் நான் பல்லடம் போகவேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து நடத்துநர் பல்லடம் பேருந்து நிலையத்திற்கு டிக்கெட் வழங்கியுள்ளார். பல்லடம் அருகே உள்ள இராயர்பாளையம் பேருந்து நிலையம் வந்தவுடன் திடீரென அந்த இளைஞன் நடத்துனரை கண்ணத்தில் பளார் என அறைந்து விட்டு பேருந்தை விட்டு இறங்கி தப்ப முயற்சி செய்தார்.

நடத்துனர் தாக்கப்படுவதை கண்ட பொதுமக்கள் அந்த வட மாநில இளைஞனை பிடித்து வைத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணைக்காக அந்த இளைஞனை பல்லடம் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

விசாரணையில் அந்த இளைஞர் வடமாநிலத்தை சேர்ந்த ராஜூ என்பதும் சின்னக்கரையில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும், கஞ்சா போதையில் இருந்த அவன் நடத்துனரை தாக்கியதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.