அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
அனந்தலை கிராமம் கெங்கையம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் செல்வம் என்பவரின் மகன் முருகன் வயது 30, இவர் நேற்றைய முன் தினம் 27.08.21பனப்பாக்கம் அடுத்த தனது பாட்டி வீடான கல்பனாம் பட்டில் நடைபெற்ற திருவிழாவுக்குச் சென்று
தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது பண்ணியூர்
கூட்ரோடு கணபதி என்பவர் என்பவரின் வீட்டின் அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த காவேரிபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் சம்பந்தமாக முருகனின் தந்தை செல்வம் காவேரிப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது