நடக்காத ஒன்றையா கே.டி.ராகவன் செய்துவிட்டார்?" - சீமான் ஆவேசம்

 


உலகில் நடக்காத ஒன்றையா பாஜகவின் கே.டி.ராகன் செய்துவிட்டார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நிர்வாகி கே.டி.ராகவன் தொடர்புள்ள வீடியோவை வெளியிட்டது அநாகரிகம் என்றும் அக்குற்றத்தை செய்தவரை கைது செய்ய வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற மாயோன் பெருவிழா நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், உலகத்தில் நடக்காத ஒன்றையா ராகவன் செய்துவிட்டார் என்றும் கேள்வி எழுப்பினார்.  கே.டி.ராகவனுக்கு  தெரியாமல் அவருடைய வீடியோவை பரப்புவதுதானே சமூக குற்றம் என்றும் அதை வெளியிட்டவரை தானே முதலில் கைது செய்ய வேண்டும் என்றும் சீமான் ஆவேசமாக பேசியுள்ளார்.