இந்திய தொழிற்சங்க மையம், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ், இந்தியன் நேஷனல் டிரைட் யூனியன் காங்கிரஸ், இந்திய மஸ்தூர் சங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம்.ஆகிய சங்கங்கள் ஒன்றிணைந்து மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

 


ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் இந்திய தொழிற்சங்க மையம், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ், இந்தியன் நேஷனல் டிரைட் யூனியன் காங்கிரஸ், இந்திய மஸ்தூர் சங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம்.ஆகிய சங்கங்கள்  ஒன்றிணைந்து மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்

கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது 9 கோரிக்கைகளை வலியுறுத்தினர்

தொழிலாளர்கள் போராடிப் பெற்ற அடிப்படை தொழிற்சங்க உரிமைகளை பறிக்காதே விவசாயத்தை கார்ப்பரேட் முதலாளிகள் ஒப்படைக்கும் 3 வேளாண் சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வேலை நிறுத்த தடை சட்டத்தை ரத்து செய்,

சிறு விவசாயம் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு வேட்டுவைக்கும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்திடு,

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்திடு விலை உயர்வை தடுத்திடு,முடக்கத்தான் வேலை இழந்த அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கிடு,

அரசுத் துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு உருவாக்க ஆட்குறைப்பு சம்பளம் பெற்று ஆகியவற்றை தடை செய்திடு,

100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்தி ரூ 420 கூலியை ரூபாய் 600 ராக உஉயர்த்தி வழங்கிடு,

 பேரூராட்சி மற்றும் நகர்ப்பகுதியை விரிவுபடுத்திடு,கொரோனா முடக்கத்தாள் வேலை இழந்த குடும்பங்களுக்கு மாதம் 7,500 வழங்கிடு,  கொரோனா தடுப்பூசியை பொதுத்துறை நிறுவனங்கள் மூலம்  தயாரித்து அனைவருக்கும் வழங்கிடு, 

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்கிடு, பொது சுகாதாரத்திற்கு தேச உற்பத்தியில் 6 சதவீத ஒதுக்கீடு செய்து அங்கன்வாடி ஊழியர் உள்ளிட்ட முன் களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் வழங்கிடு, 

அமைப்புசாரா தொழிலாளர்கள் வாரிய பதிவை எளிமைப்படுத்தி பயணப் பயன்கள் அதிகப்படுத்தி வழங்கிடு, என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு   ஒருங்கிணைந்த தொழிற்சங்கங்களை சார்ந்த என்.ரமேஷ், ஏ எஸ் சங்கர் மேஸ்திரி,எஸ்.வையாபுரி,டாக்டர்.பிரகாஷ்,எஸ்.குமுதா ஆகியோர் தலைமை தாங்கினர்

எம் பி. ராமச்சந்திரன், எஸ்.சாம்பசிவம், பி.பன்னீர்செல்வம், எஸ்mஆறுமுகம்,அன்பழகன் ,எல்.சி.மணி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)