நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சியினர் காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே உத்திரம்பட்டு ஊராட்சி செயலாளர் வெங்கடேசனை இடமாற்றம் செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்
சிறப்பு அழைப்பாளர்களாக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் பாவேந்தன், மேற்கு மாவட்ட செயலாளர் அரி, மாவட்ட இளைஞர் பாசறை அசின், மாவட்ட பொருளாளர் தொணைபித் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் பாவேந்தன் மற்றும் ராஜ்குமார் கண்டன உரையாற்றினர் ராஜ்குமார்
பேசுகையில் பேசுகையில் உத்திரம் பட்டு ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் 100 நாள் வேலை திட்டத்தில் ஒரு வருடத்தில் சுமார் 20 லட்சம் ரூபாய் 20 வருடத்திற்கு கோடிக்கணக்கில் முறைகேடு செய்து உள்ளார் என்றும்,
உதிரம்பட்டு பஞ்சாயத்துக்கு உட்பட்ட இடங்களில் அரசு வீடு கட்டும் திட்டத்தில் பயனாளி ஒருவரிடம் ரூபாய் 30 ஆயிரம் வீதம் வசூலித்து உள்ளார் என்றும், ஈமச் சடங்கிற்காக அரசு கொடுக்கும் நிதி உதவியை இதுவரைக்கும் யாருக்குமே கொடுத்தது இல்லை என்றும் குற்றம் சாட்டினார்,
தொடர்ந்து பேசுகையில் இதுவரையில் சுமார் 20 கோடி ரூபாய் மொத்தமாக அவர் முறைகேடு செய்து உள்ளார் என்றார், உத்திரம் பட்டு கிராமத்தில் குடி தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை மாற்று வழி செய்து தரக் கோரியும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, மேலும் இவர் வீட்டின் அருகே சொந்தமாக ஹாலோ பிளாக் கம்பெனி வைத்து நடத்திவருகிறார்
வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் வரும் கழிவறை கட்டுதல் மற்ற இதர பணிகளுக்கு இவர் வைத்திருக்கும் ஆலோ பிளாக் கற்களை மட்டுமே வைத்து கட்ட வேண்டும் என்று வற்புறுத்தி அவரே முன்னின்று கட்டித் தருகிறார் அந்தக்கல் வேண்டாம் என்று எந்த பயனாளிகள் சொல்கிறார்களோ அவர்களுக்கு பில் தருவதில் வேண்டுமென்றே இழுப்பறி செய்கிறார்,
அவர் தயாரிக்கும் கல் தரமானதாக இல்லை இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார், மேலும் அவர் பேசுகையில் அரசு வழங்கும் கழிவறை கட்டுமான பணிகளுக்கு உரிய நீதியை இவர் வழங்கவில்லை என்று குற்றம்சாட்டினார் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் என்றார்
எனவே இவரை உடனடியாக இடமாற்றம் செய்து, நாங்கள் சொல்லும் முறைகேடுகளை ஆய்வு செய்து அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்
இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினருடன் காவேரிப்பாக்கம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் உடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்க உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.