குவாரிகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு : கருத்து கேட்பு கூட்டத்தில் திமுகவினர் மிரட்டல்… முகிலன் திடீர் தர்ணா..

 கரூர் அருகே புதிய 2 கிரானைட் குவாரி அமைய உள்ளதற்கு கருத்துக்கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சிறிது நேரத்திலேயே மாவட்ட ஆட்சியர் எழுந்து சென்றதைக் கண்டித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார்.

கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து வெள்ளியணை பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கே.பிச்சம்பட்டி அப்பகுதியில் கிரானைட் குவாரி நிறுவனம் 2 புதிதாக அமைக்கும் திட்டத்தை பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கல் குவாரி அமைக்க கூடாது என்று சரமாரி கேள்விகளை கேட்டனர். சிறிது நேரத்திலேயே செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு எனவே அலுவலகத்தில் வேலை இருப்பதாக கூறி, கருத்துக்கேட்பு கூட்டத்தின் பாதியிலேயே மாவட்ட ஆட்சியர் கிளம்பிச் சென்றார்.

பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கே.பிச்சம்பட்டி பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில், பத்து கிலோமீட்டர் தள்ளி கூட்டத்தை நடத்தியால் 30-க்கும் குறைவான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் அதிக அளவில்


கல்குவாரி உரிமையாளர்கள், அவர்களது ஊழியர்கள், திமுக நிர்வாகிகளை வைத்தே கூட்டத்தை நடத்துகிறீர்கள் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், எங்கள் ஊரில் கூட்டத்தை நடத்துங்கள் எங்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் கருத்து தெரிவிக்க அப்போது திமுக நிர்வாகிகள் தலையிட்டு உடனே அமர வைக்க முயன்றனர். அப்பொழுது காரசார விவாதங்கள் நடைபெற்றது. அடுத்து சிறிது நேரத்தில் மீண்டும் திமுகவினர் குறுக்கிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் தர்ணாவில் ஈடுபட்டார்.

அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் தர்ணா போராட்டத்தை கைவிட்டார். மேலும் கே.பிச்சம்பட்டி கிராமப் பகுதியைச் சார்ந்த நபர்கள் வெறும் 30-க்கும் குறைவான பொதுமக்கள் பங்கேற்ற நிலையில் எங்கள் ஊர் கே.பிச்சம்பட்டியில் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்துங்கள் என்று புறக்கணித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்