ராணிப்பேட்டை மாவட்டத்தில் முக்கிய சட்டம் ஒழுங்கு பிரச்சனை, லஞ்சம் தொடர்பான ரகசிய தகவல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாக தெரிவிக்க பொதுமக்களுக்கு உதவி எண் அறிமுகம்


 ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிகழும் முக்கிய சட்டம் ஒழுங்கு பிரச்சனை, சட்டவிரோத செயல்கள், கார்டன், லாட்டரி, கள்ளச்சாராய விற்பனை செய்தல், மற்றும் மணல் கடத்தல்,  ரவுடிசம்உள்ளிட்ட 

 காவல்துறை அதிகாரிகள்,ஆளிநர்கள், தொடர்பான லஞ்சம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த புகார்கள் எதுவாக இருந்தாலும் பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாக தெரிவிக்க

 


கீழ்க்கண்ட அலைபேசி எண்ணில் அழைத்து அல்லது வாட்ஸ் அப் மூலமாக தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தொடர்பு எண் 7530026333

பொதுமக்களுக்கான மாவட்ட காவல் கண்காணிப்பாளரின்

 நேரடி தொடர்பு என அறிமுக நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபன் சத்தியன் அவர்களால் இன்று  28.08.21காலை சுமார் பதினொரு மணி அளவில் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடத்தப்பட்டது

 தொடர்ந்து இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தெரிவிக்கையில் முக்கிய தகவல் அளிக்கப்படும் தகவலாளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பணம் வெகுமதி அளிக்கப்படும் என்றும் 

தகவல் அளிப்பவர்கள் பற்றி விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)