அரக்கோணம் அருகே நள்ளிரவு நடந்த பூஜை நரபலியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை
அரக்கோணம் அடுத்த கிழவனம் கிராமத்தில் நள்ளிரவில் யாரும் குடியில்லாத வீட்டில் பயம் அடையும் வகையில் பூஜைகள் செய்யப்படுவதாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் உடனே சம்பவ இடத்திற்கு சென்ற தாலுகா போலீசார் அங்கு பூஜையில் ஈடுபட்டிருந்த ஆசீர்வாதம்(51) என்பவரை பிடித்து போலீஸ் நிலையத்தில் விசாரித்தனர் அப்போது தான் லாரி டிரைவராக இருப்பதாகவும் தற்போது அரக்கோணம் அருகே உள்ள முசல்நாயுடு கண்டிகையில் வசித்து வருவதாகவும் மூன்று மகள்கள் இருப்பதாகவும் இரண்டாவது மகளின் கணவர் கடந்த மாதம் மாரடைப்பால் இறந்து விட்டார்.
இதனால் இரண்டாவது மகளுக்கு பூர்வீக வீடான கிழவனம் கிராமத்தில் உள்ள வீட்டில் குடியமரத்துவதற்காக அந்த வீட்டில் சுத்தம் செய்யப் செய்தோம் மேலும் கடந்த 25 ஆண்டுகளாக அந்த வீடு பூட்டப்பட்டி இருந்ததால் அந்த வீட்டில் பேய் உள்ளதாகவும் அதனை விரட்ட வேண்டும் என்று மந்திரவாதி தெரிவித்ததால், பூஜை செய்வதற்காக இரண்டு அடி பள்ளம் எடுக்கப்பட்டு பேய் விரட்டுவதற்காக பூஜைகள் செய்து வந்ததாவும் தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் தாலுகா போலீசார் நரபலி ஏதேனும் நடத்த பூஜைகள் செய்வதற்கு முயற்சி செய்யதாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.