ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கோவிட்-19 நோய் தொற்று பரவ காரணமாக ஊரடங்கு உத்தரவு தளர்வுடன் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது பல்வேறு அரசாணைகள் பல்வேறு தளர்வுகளுடன் படிப்படியாக அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அரசாணை எண் 342 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை பே.மே4 துறை நாள் 08.04.21 திருவிழாக்கள் மற்றும் அது சம்பந்தமான ஊர்வலங்கள் ஆகியவற்றின் நடத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் அரசாணை எண் 504 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை பே.மே4 துறை நாள் 7.08.21 -இல் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வெள்ளி, சனி, மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது அந்தந்த நேர்வுகளுக்கு ஏற்ப ஆட்சித்தலைவர்கள் நோய்த் தொற்று பரவலைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தற்போது வருகின்ற20.08. 21 அன்று மொகாரம் பண்டிகையை முன்னிட்டு ஆங்காங்கே பஞ்சா வைத்து வழிபாடு செய்தல் ஊர்வலங்கள் நடத்துதல் மற்றும் தீமிதி திருவிழா நடத்துதல் போன்ற கூட்டமாய் மக்கள் கூடும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இதன் மூலம் தடைவிதித்து உத்தரவிடப்படுகிறது
நோய் தொற்று பரவல் குறைவது போல தோற்றமளித்தாலும் அது பல்வேறு வகையில் உருமாறி தீ நுண்மியாக பல்வேறு வடிவங்கள் எடுத்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நோய்த்தொற்று மூன்றாவது அலை பரவலாம் என்றும் அது மற்ற இரண்டு அலைகளை காட்டிலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்றும் வல்லுநர்களால் தெரிவிக்கப்பட்டு வருகிறது மேலும் இது சம்பந்தமாக அரசு அனைத்து விதமான முயற்சிகள் மூலம் நோய்த்தொற்று பரவலைத் தடுக்க பரவலாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது இருப்பினும் நோய்தொற்று முற்றிலுமாக நீங்கி விடவில்லை என்ற நிலையே காணப்படுகிறது நோய் பரவலை தடுப்பதில் பெரும் சவாலாகவே உள்ளது எனவே பொதுமக்களின் நலன் கருதி மக்கள் கூட்டமாய் கூடுவதை தடுப்பதுடன் மிகப்பெரிய பரவலை தடுப்பதற்கான வழிமுறையாக இருக்கும் என்கிற நிர்ப்பந்தம் வசத்தால் தடை விதிக்கப்படுகிறது
இருப்பினும் கூட்டம் கூடாமல் உரிய சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள இன்னும் பிற பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்களை கொண்ட சிறு குழுவாக அடிப்படையாக மேற்கொள்ள வேண்டிய சடங்கு சம்பிரதாயங்களை மட்டும் செய்து கொள்ளலாம் என்றும் அதனால் எக்காரணத்தைக் கொண்டும் பஞ்சா வைதல் ஊர்வலம் நடத்துதல் தீமிதி விழா நடத்துதல் போன்றவற்றை அனுமதிக்கப்படாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது
பொதுமக்கள் நலன் கருதி தடை விதிக்கப்படுவது அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.