ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் மாத்திரைகள் இல்லாமல் மக்கள் அவதி
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 89 வது வார்டு பாடி வட்ட வடிவ நகரில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் மாத்திரைகள் இல்லாமல் மக்கள் அவதி சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அங்கு வரும் முதியவர்கள்,கர்ப்பிணி பெண்களின் பணிவான வேண்டுகோள்
89 வார்டு பாடி வட்ட வடிவ நகரில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள் என ஏராளமானவர்கள் தொடர்ந்து மருந்து வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள் நீண்ட நாட்களுக்கு மேலாக மாத்திரைகள் இல்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்
வசதி இல்லாத எங்களுக்கு தொடர்ந்து மருந்துகள் கொடுத்துவந்த இந்த சுகாதார மருத்துவமனையில் தற்போது தொடர்ந்து மருந்துகள் இல்லை என்றால் நாங்கள் என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் நாங்கள் தவித்து வருகிறோம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
அதேபோல் கர்ப்பிணி பெண்களுக்கு பல மாதங்களாக 7 ஆம் மாதம் கொடுக்கும் ஊட்டசத்து பொருள்கள் மருத்துவமனைக்கு வரவில்லை வந்தவுடன் கொடுத்து விடுவோம் என்று தொடர்ந்து கூறிவருகிறார்கள் இன்றுவரையிலும் கொடுக்கவில்லை என்றும் சம்பந்தப்பட்ட மருத்துவ உயர்அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து
முதியவர்களுக்கும்,கர்ப்பிணி பெண்களுக்கும் மாத்திரை மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் கிடைக்க வழி செய்யுமாறு மருத்துவமனைக்கு வரும் பொது மக்களின் பணிவான வேண்டுகோள்.