புதுச்சேரியில் இருந்து ஆம்புலன்ஸில் மது கடத்திய ஓட்டுநர் கைது...

 

கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் எப்பொழுதும் போல் நேற்று கடலூர் சாவடியில் உள்ள சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். எப்பொழுதுமே புதுச்சேரியில் இருந்து மது கடத்துபவர்கள் அதிகமாக அந்த வழியையே பயன்படுத்துவர். அப்போது அந்த வழியாக தனியார் ஆம்புலன்சை மறித்து, ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதில் சந்தேகமடைந்த போலிசார் ஆம்புலன்சில் சோதனை செய்தனர். அப்போது ஆம்புலன்சில் ரூபாய் 3 ஆயிரம் மதிப்புள்ள 20 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 


புதுச்சேரியில் இருந்து ஆம்புலன்ஸில் மது கடத்திய ஓட்டுநர் கைது...


இதையடுத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பண்ருட்டியை சேர்ந்த சதிஷ் (27) என்பதும், புதுச்சேரி மாநில எல்லையில் இருந்து மதுபாட்டில்களை குறைந்த விலைக்கு வாங்கி, சாவடி வழியாக பண்ருட்டிக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சதீஷை கைது செய்த போலீசார் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.


புதுச்சேரியில் இருந்து ஆம்புலன்ஸில் மது கடத்திய ஓட்டுநர் கைது...


இதுபோல் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. புதுச்சேரியில் மதுவின் விலையானது தமிழ்நாட்டில் இருப்பதை விட விலை குறைவாக இருப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தெரிவித்தனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்றானது சற்று குறைந்து தற்பொழுது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது, அதேபோல் தமிழ்நாட்டிலும் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரியில் இருந்து ஆம்புலன்ஸில் மது கடத்திய ஓட்டுநர் கைது...


ஆனால் புதுச்சேரியிலும் கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டு மதுபானக்கடை மற்றும் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இருந்து குறிப்பாக கடலூரில் இருந்து மதுப்பிரியர்கள் அங்கே சென்று மது வாங்கிவருகின்றனர். இந்த கொரோனா காலகட்டத்தின் ஆரம்பகாலத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நேரத்தில் சிறிது நாட்கள் கழித்து தமிழ்நாட்டில் மட்டும் மதுபான கடைகள் திறக்கப்பட்டது அப்பொழுது புதுச்சேரியில் இருந்து பல்வேறு மக்கள் கடலூரில் உள்ள மதுபானக்கடைகளில் குவிந்தனர் ஆனால் இப்பொழுது புதுச்சேரியிலும் ஊர்டங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் ஊரடங்கிற்கு முன் இருந்த நிலை தற்பொழுது மீண்டும் திரும்பியுள்ளது.


ஆனால் இந்த கொரோனா காலகட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பெரிதும் உதவியாக இருந்து, தங்களது உயிரையும் பொருட்படுத்தாது பல்வேறு உயிர்களை காப்பாற்றிய எத்தனையோ ஆம்புலன்ஸ் ஒட்டுவநர்களை கண்டுள்ளோம் அவர்களின் பெயர்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இவ்வாறும் சில பேர் இருப்பது வருத்தத்தை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். 

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)