ஜனரட்சன் பிரதாப்பு ஆடிட்டர் கிருஷ்ணகிரியில் கொலை- மாந்தோப்பில் உடல்புதைப்பு...!

 


சென்னை வேளச்சேரியில் வசித்துவரும் ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதாப் தன்னுடன் பணிபுரியும் கிருஷ்ணகுமார் என்பவருடன் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி  சென்னையிலிருந்து வேலூருக்கு காரில் வந்தார். இவர்களுடன் பணிபுரியும் சபரீஷ் என்பவரும் மற்றொரு காரில் வந்தார். இரவு 10 மணியளவில், ஜனரஞ்சன் பிரதாப் தன் மனைவி பூர்ணிமாவுக்கு போன் செய்து தான் வேலூருக்கு வந்த வேலை முடிந்து விட்டதாகவும் மறுநாள் கிருஷ்ணகிரியில் வேலை உள்ளதால் அங்கு செல்வதாக ஜனரஞ்சன் பிரதாப் கூறியுள்ளார். 

இந்த நிலையில் மறுநாள் 27ஆம் தேதி ஜனரட்சன் பிரதாப்புக்கு அவரது மனைவி பூர்ணிமா போன் செய்துள்ளார். அப்போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அவருடன் சென்ற கிருஷ்ணகுமார், சபரீஷ் இருவருக்கும் போன் செய்த போது அவர்கள் பூர்ணிமாவின் செல்போன் அழைப்பை ஏற்கவில்லை. நீண்ட நேரம் கழித்து போன் பேசும்போது சரியானமுறையில் பதிலளிக்காததால் இதனால் சந்தேகம் அடைந்த பூர்ணிமா பிரதான் கடந்த 28ஆம் கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


சென்னையை சேர்ந்த ஆடிட்டர் கிருஷ்ணகிரியில் கொலை- மாந்தோப்பில் உடல்புதைப்பு...!

புகாரின் பேரில் காவல்துறையினர் ஆய்வாளர் (பொறுப்பு) முரளி மற்றும் காவலர்கள் விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் ஜனரஞ்சன் பிரதாப் உடன் சென்ற கிருஷ்ணகுமார், சபரீஷ் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் அவரை கொலை செய்து உடலை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாமல்பட்டி அருகே புதைத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினர் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி,
துணை காவல் கண்காணிப்பாளர் சூப்பிரண்டுகள் சரவணன் தங்கவேல், அலெக்சாண்டர் , கிருத்திகா மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு மாலை சென்றனர். அங்கு சாமல்பட்டி அருகே கொல்லப்பட்டி என்ற இடத்தில் ஒரு மாந்தோப்பில் அவரது உடலை புதைக்கப்பட்டிருப்பதாக கிருஷ்ணகுமார், சபரீஷ் கூறிய தகவலையடுத்து அங்கு உடலை தோண்டி எடுக்கும் பணி தொடங்கியது. அப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் இரவு 10 மணியளவில் உடலானது தோண்டி எடுக்கப்பட்டது.


சென்னையை சேர்ந்த ஆடிட்டர் கிருஷ்ணகிரியில் கொலை- மாந்தோப்பில் உடல்புதைப்பு...!

பின்னர், பிரேத பரிசோதனைக்காக உடலானது கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக கிருஷ்ணகுமார், சபரீஷ் உள்ளிட்ட 4 பேரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)