பாஜகவை விடாமல் துரத்தும் பாலியல் சர்ச்சை..

 



தமிழக பா.ஜ.கவில் மாநிலப் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்த கே.டி.ராகவன் குறித்த பாலியல் புகாருக்கு ஆதாரமான ஆபாச வீடியோவை பா.ஜ.கவை சேர்ந்த யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் சமீபத்தில் வெளியிட்டார்.  அந்த வீடியோவில் பா.ஜ.க நிர்வாகி கே.டி.ராகவன் பெண் ஒருவருடன் செல்போனில் வீடீயோ காலில் பேசி அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.  

பா.ஜ.கவில் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண்களைப் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்குவதை அம்பலப்படுத்துவதற்காகத் தான் இந்த வீடியோ வெளியிடப்பட்டதாக மதன் ரவிச்சந்திரன் தெரிவித்திருந்தார். மேலும், இந்த வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலோடு தான் வீடியோவை வெளியிட்டதாகத் தெரிவித்தார்.  

கே.டி.ராகவன் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த நிலையில், வீடியோ வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன், வெண்பா ஆகியோர் பா.ஜ.கவிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக வீடியோ வெளியிட்டுள்ளார் பா.ஜ.கவிலிருந்து நீக்கப்பட்ட மதன் ரவிச்சந்திரன்.   அண்ணாமலை தங்களிடம் பேசிய ஆடியோக்களையும் வெளியிட்டுள்ளார் மதன் ரவிச்சந்திரன்.  இந்த வீடியோவில் பேசியுள்ள மதன் ரவிச்சந்திரன், அண்ணாமலையை சந்தித்து, இப்படி ஒரு பாலியல் வீடியோ இருப்பதாகவும், எனவே கட்சிக்குள் யாருக்கும் தெரியாமல், அதை விசாரணை நடத்தவேண்டும் என்று தான் வற்புறுத்தியதாகவும், ஆனால், அண்ணாமலைதான், நமது கட்சிக்கார பெண்ணுக்கு நீதி தேவை; வீடியோவை வெளியிடுங்கள் என்று கூறியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.  

வீடியோவை வெளியிட்டபிறகு பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் என்றும், நான் உங்கள் பக்கம் எப்போதும் நிற்பேன் என்றும் அண்ணாமலை கூறியதாகவும் அந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது.  மேலும், "பல பெண்களின் பெரிய பிரச்சனைகளுக்கு அண்ணாமலை காரணமாக இருக்கப்போகிறார். 

கே.டி.ராகவனின் வீடியோவை அண்ணாமலைதான் வெளியிட சொன்னார் என்பதற்கான ஆடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இதை அவர் மறுத்தால் வீடியோவும் வெளியிடப்படும்." என மதன் தெரிவித்துள்ளார்.  பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் மீதான பாலியல் புகாரைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வருவது பா.ஜ.க வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)