குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் துளசி கைது!!

 


விழுப்புரம் அருகே பெற்ற குழந்தையை தாய் கொடூரமாக தாக்கியது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் துளசி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்த வடிவழகன் (26). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும், ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த துளசி (23) என்ற பெண்ணிற்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நான்கு வயதிலும், ஒன்றரை வயதிலும் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றன.கணவன்-மனைவி இருவருக்கும் அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்படும்போது துளசி தனது இளைய மகனை இரக்கமற்ற முறையில் அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் அவர் குழந்தையை அடிப்பதை அவருடைய அலைபேசியில் வீடியோவாக யாருக்கும் தெரியாமல் எடுத்து வைத்துள்ளார். இளைய மகனை வாயில் அடித்து காயம் ஏற்படுத்துவதை தனது அலைபேசியில் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார்.

பிறகு குழந்தை கீழே விழுந்து அடிபட்டுவிட்டதாகக் கணவரிடம் கூறி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் நடைபெற்று சுமார் ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், நேற்று மாலையிலிருந்து சமூக வலைத்தளத்தில் பெண் ஒருவர் குழந்தையை அடித்து சித்திரவதை செய்யும் நான்கு வீடியோக்கள் வேகமாகப் பரவின.இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து, குழந்தையை சித்திரவதை செய்யும் பெண்ணை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்தனர்.

இதனையடுத்து அப்பெண்ணின் கணவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின்‌ அடிப்படையில் சித்ரவதை செய்த தாயின் மீது நான்கு பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணை செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். துளசி ஆந்திராவில் உள்ள தனது தாயார் வீட்டில் இருந்துள்ளார். அங்கு விரைந்த தனிப்படையினர் அவரை கைது செய்துள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)