சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்வழங்கிய ’நச்’ தீர்ப்புகளும், விமர்சனங்களும்..!

 


சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் ஓய்வு பெறுகிறார். இந்திய நீதிபதிகளில் யாருக்கும் இல்லாத சிறப்பம்சம் நீதிபதி கிருபாகரனுக்கு உண்டு. ஆம். Justice N.Kirubakarans' followers என்ற பெயரில் பேஸ்புக்கில் இவருக்கென்று  தனிக் கணக்கு உண்டு.  கிட்டத்தட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்  இந்த பக்கத்தை பின் தொடர்கின்றனர்.  நீதிபதி என்.கிருபாகரன் வெகுஜன மக்களின் அன்பையும் பெற்றுள்ளார் என்பது இதன் மூலம் அறிய முடிகிறது.

இருப்பினும், அவரின் பெரும்பாலான உத்தரவுகள் வெகுமக்களிய அணுகுமுறையை கொண்டுள்ளாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே, இந்த கட்டுரையில் அவர் அளித்த முக்கிய உத்தரவுகளின் மூலம் பதில் தேட முயற்சிப்போம். 

சமூகத்தில் பல்வேறு குற்றச்சம்பவங்கள் அதிகரிக்க அடிப்படை காரணம் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடின்மையே போன்ற வாதங்களை நீதிபதி என். கிருபாகரன் தனது பல்வேறு வழக்குகளில் தெரிவித்துள்ளார்.     

சென்னை உயநீதிமன்ற மதுரைக்கிளையில், முத்துக்குமார் எனும் வழக்கறிஞர் தொடுத்த வழக்கில், பிராங்க் ஷோ எனப்படும் குறும்பு வீடியோக்கள் எடுக்கவும், வெளியிடவும் தாடைவிதிப்பதாக நீதிபதிகள் கிருபாகரன் எஸ்.எஸ்.சுந்தர்  அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. 

 விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.எஸ்.சகாதேவராஜா என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், ஆபாசத்தை பரப்பும் வகையிலான விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்தார். இந்த தீர்ப்பின் கீழ், கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சினை தொடர்பான மருத்துவங்கள்,உள்ளாடைகள், சோப்புகள், ஐஸ்கிரீம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை விதிக்கப்பட்டது.  பெண்கள் மற்றும் குழந்தைகளை பேணிக் காக்கும் பொறுப்பு நீதிபதிகளுக்கு உள்ளதாக தெரிவித்தார். இந்த தீர்ப்பு பல்வேறு விவாதங்களை முன்னெடுத்தது.        .  


நீதிபதி என்.கிருபாகரன் வழங்கிய ’நச்’ தீர்ப்புகளும், விமர்சனங்களும்..!மேலும், இவரது தலைமையிலான அமர்வு, இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தின் டீசரை, யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. தணிக்கைக் குழுவால் ஏற்கனவே இப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் அளிக்கப்பட்ட நிலையில், நீதிபதிகளின் இந்த தீர்ப்பு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. 

மது கலச்சாரத்தால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, அரசு சார்பில் மதுபோதை மீட்பு மையங்கள் மற்றும் மருத்துவ முகாம்கள் அமைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட  பொதுநல வழக்கில், "அனைத்து சமூக விரோத செயல்களுக்கும் மதுபானமே முக்கிய காரணம். சமூகத்தின் நலன் கருதி இளைஞர்கள் மதுவை தவிர்க்க வேண்டும் என்றும், இளம் வழக்கறிஞர்கள் நண்பர்களுக்கு மது விருந்து வழங்குவதை தவிர்க்க வேண்டும்" என்றும்  தெரிவித்தார்.   

தமிழகத்தில், மற்ற வீரர்களை போல் சிறப்புத்திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து சலுகைகளையும், ஒரே மாதிரி வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கில், " இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அது மட்டும் தான் விளையாட்டு என்ற எண்ணத்தை இளைஞர்களிடம் செயற்கையாக ஏற்படுத்தியுள்ளனர். இது தவறான நடைமுறையாகும். மற்ற விளையாட்டுகளையும் சமமாக கருத வேண்டும்" என்று  தெரிவித்தார்.  

கூட்டாட்சித் தத்துவம்: 

மாநில அரசு எந்த மொழியில் மத்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்புகிறதோ, அந்த மொழியிலேயே மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. 

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் நீலகிரி ஆயுத தொழிற்சாலையில் பணிநியமன முறைகேடு தொடர்பான் வழக்கில், "மாநிலங்களில் பணியமர்த்தப்படும் அதிகாரிகள் அம்மாநில மக்களுடன் தகவல் தொடர்பு கொள்ளும் வகையில் அப்பகுதி மொழியை அறிந்திருக்க வேண்டும். ஆனால் அவற்றில் தேவையற்ற பல அரசியல் நகர்வுகள் உள்ளன. வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்தி மொழியில் தேர்ச்சி பெற இயலாத நிலையில், தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று பணிகளில் அமர்வது எப்படி? என தெரியவில்லை" என்று தெரிவித்தார். 

அரசியல் புரிதல்:  

நீதிபதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகின்றனர். எனவே, பொதுவாக இந்திய நீதிபதிகளுக்கு வெகுஜன பிரதிநிதித்துவ ஜனநாயக தேர்தல் அரசியலில் சற்று மாறுபட்ட கருத்தே நிலவுகிறது. குறிப்பாக, வெகுமக்களிய அணுகுமுறையை நிபுணத்துவம் பெற்ற நீதிபதிகள் புறந்தள்ளுகின்றனர். இந்த,  போக்கு நீதிபதி கிருபாகரனிடம் காணப்படுகிறது.         

உதாரணமாக, பிரியாணி, குவாட்டர் பாட்டிலுக்காகவும், சில ஆயிரங்களுக்காகவும் தங்களது வாக்குகளை விற்பனை செய்துவிட்டு நல்ல அரசியல் தலைவர்களை மக்கள் எப்படி எதிர்பார்க்கமுடியும்? போன்ற கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார். வாக்குக்காக மட்டுமல்ல வருங்கால தலைமுறையினர், வாய்ப்புகளை பயன்படுத்தும் வகையில் உருவாக்கும் பணியிலும் அரசியல் கட்சிகள் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.  மேலும், நீட் தேர்வு விவகாரத்தில், மாணாக்கர்களின் தற்கொலையை அரசியல் கட்சிகள் வேண்டுமென்றே அரசியல் செய்வதாகவும் குற்றம்சாட்டினார். 

மதுரை பாராலிம்பிக் விளையாட்டுச் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் பேசிய நீதிபதி என்.கிருபாகரன் "நூறு நாள் வேலை மிகவும் பயனுள்ள திட்டம். ஆனால் அந்தத் திட்டத்தின் பணியாளர்கள் வேலை செய்யாமல் மரத்தடியில் அமர்ந்து பேசி, பொழுதுபோக்குவது கேவலமானது" என்றும் தெரிவித்தார்.

இந்தியாவில் படிப்பறிவு இல்லாத ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் அரசியல் புரிதல் படித்த ஆங்கிலேய மக்களை விட சிறந்து விளங்குகின்றன என்று பல்வேறு ஆய்வுக்கட்டுரைகள் தெரிவிக்கின்றன.                      
  
சமூகம் சார்ந்த பிரச்சனைகள்     

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும், வேதனைகளும் அளவிடற்கரியது எனக்கூறி கண்கலங்கினார். மேலும், ஏழை மாணவர்களின் வாழ்வில் ஏற்றம் பெற ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா? என்றும் காரசாரமாக கேள்வி எழுப்பினார்.  தமிழ்நாட்டில் 7.5 உள்ஒதுக்கீட்டில் நீதிபதி கிருபாகரன் முக்கிய பங்கு வகிக்கிறார். 

இது ஒருபுறம் இருக்க, மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத் திருத்தம்  செய்வதற்கும் முன்பே பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று யோசனையை முதலில் வைத்தவரும் இவர் தான்.         

தமிழ் சிந்தனை:  

தமிழ் கல்வெட்டு தொடர்பாக மணிமாறன் என்பவர் தொடர்ந்த வழக்கில், " சென்னையில் உள்ள தொல்லியல்துறை கல்வெட்டியல் கிளையை, தமிழ் கல்வெட்டியல் கிளை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். தமிழ் தொடர்பான அனைத்து ஆவணங்கள், தமிழ் கல்வெட்டுகள் போன்ற அனைத்தையும் மைசூரிலிருந்து சென்னை தமிழ் கல்வெட்டியல் கிளைக்கு 6 மாதத்திற்குள் மாற்ற வேண்டும். தொல்லியல் துறையில் உள்ள கல்வெட்டியல் பிரிவு  உள்ளிட்ட பிரிவுகளில் போதுமான அளவு நிபுணர்களை பணியமர்த்த வேண்டும். சென்னையில் உள்ள தமிழ் கல்வெட்டியல் பிரிவிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு 6 மாதத்திற்குள்ளாக செய்து கொடுக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.  ஆனால், Kalailingam v State represented by The Deputy Superintendent of Police  என்ற வழக்கில் இவரின் அணுகுமுறை பலரையும் ஆச்சரியப்படுத்தியது. மத்திய அமைச்சராக நாராயணசாமி இருந்தபோது,புதுச்சேரியில் உள்ள அவரது வீட்டில் வெடிபொருள் வைக்கப்பட்டது தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கலைலிங்கம் என்பவரை தேசிய விசாரணை ஆணையம் கைது செய்தது. தனக்குப் பிணை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீடு தாக்கல் செய்தார். விசாரணை முடியும் தருவாயில் இருப்பதால் பிணை வழங்க வேண்டாம் என்று நீதிமன்ற அமர்வு முடிவு செய்தது.  அப்போது, நீதிபதி கிருபாகரன் காவல்துறை சார்ஜ் சீட்டில் உள்ள சில வற்றை குறிப்பிடத் தொடங்கினர். தமிழ்நாட்டையும், தமிழ்மொழியையும் விடுவிப்போம் போன்ற துண்டு பிரசுரங்கள் குற்றவாளியிடம் இருந்து மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தார். 

மேலும், இனம், மொழி என்ற பெயர்களில், சமூகத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தேச விரோத சக்திகளை, இரும்புக்கரத்தால் அரசு அணுக வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

பிணை வழங்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிபதி கிருபாகரனின் இந்த அணுகுமுறை மிகவும் சர்ச்சையானதாக கருதப்பட்டது. உதாரணமாக, வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிபதி தன்னிச்சையாக கிருபாகரனின் இந்த  குற்றம் நிரூபிக்கப்படும் வரை, சம்பந்தப்பட்டவர் அப்பாவி என்பதே இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை வாதமாகும். துண்டு பிரசுரங்கள் வைத்திரிந்தால் குற்றவாளி என நீதிபதி தன்னிச்சையாக எப்படி புரிந்து கொள்ளலாம் என்று பல்வேறு சட்ட நிபுணர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.            

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)