தமிழக விவசாயிகள் சங்கம் நேரடி கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க கோரி தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் வேளாண்மை துறை அதிகாரிகளால் பரிந்துரை செய்யப்பட்டு விடுபட்ட இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க கோரி தமிழக அரசை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு
சிஎஸ்.மணி மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார், மாவட்டச் செயலாளர் வேலாயுதம் முன்னிலை வகித்தார்,மாநில இளைஞரணி செயலாளர் சுபாஷ் வரவேற்புரையாற்றினார், மாநில செயலாளர் எஸ்.உதயகுமார் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார் அவர் பேசும்போது ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தினார்
வெளிமார்க்கெட்டில் நெல்லுக்கு கட்டுமான விலை கிடைக்காததால் தமிழக அரசின் சார்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் விடுபட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை காலதாமதம் செய்யாமல் உடனடியாக திறக்க கோரியும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை உரிய நேரத்தில் கொண்டு செல்லாததால் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் போக்குவரத்து ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் இரண்டு நவீன அரிசி ஆலைகள் அமைக்க கோரியும், விவசாயிகள் விளைவித்து உள்ள நெல்லினை உலர வைத்து பாதுகாக்க போதிய சேமிப்புக் கிடங்குகள் அமைத்து தரக்கோரியும்,
தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த படி நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 2500 உடனே வழங்கிட கோரியும் கண்டன உரையாற்றினார்.மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க முன்னணி பொறுப்பாளர்களும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்த நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட பொருளாளர் என்.ராஜமாணிக்கம் நன்றி உரையாற்றினார்.