குழந்தையை மிருகத்தனமாக தாக்கி வீடியோ எடுத்த பெண்.. இணையத்தில் வெளியான அதிர்ச்சி வீடியோ

 


விழுப்புரத்தில் தான் பெற்ற குழந்தையை மனசாட்சியே இல்லாமல் அடிக்கும் பெண்ணின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணலப்பாடி மதுரா-மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவழகன். இவருக்கும் ஆந்திர மாநிலம் சித்தூர் தாலுகா கராம்பள்ளி கிராமத்தை சேர்ந்த துளசி(22) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு கோகுல்(4) மற்றும்  பிரதீப்(2) இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்படும் என கூறப்படுகிறது.பிரச்சனை காரணமாக கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி  வீட்டில் கணவன் இல்லாத நேரம் பார்த்து துளசி தனது இளைய மகன் பிரதீப்பை கடுமையாகத் தாக்கியதை வீடியோ பதிவு செய்துள்ளார். இதில் காயமடைந்த குழந்தை பிரதீப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது தனது தந்தையுடன் வசித்து வருகிறார்.

துளசியை தனது தாய் வீடான ஆந்திரா சென்று விட்டார்.இதனிடையே தற்போது குழந்தையை தாய்மையை மறந்து மிருகத்தனமாக துளசி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியையும் கடும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.செய்தியாளர்: ஆ.குணாநிதி    ( விழுப்புரம்) 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்