தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் ஆய்வு நடத்தினார்.


அரக்கோணம் ரெயில் நிலையம், தெற்கு ரெயில்வே மருத்துவமனை, ஒட்டுனர்கள் ஒய்வு அறை உள்ளிட்ட இடங்களில் தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் ஆய்வு நடத்தினார்.

ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வருகை தந்த சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் கணேஷிடம்  தணிகைபோளூர் கிராம மக்களும் அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்கம் மற்றும் பாஜகவினரும் கோரிக்கை மனு அளித்தனர். அதில் அரசின் வழிகாட்டுதலை ஏற்று அனைத்து வகையான ரெயில் பயணிகளையும் நேர கட்டுப்பாடின்றி பயணிக்க அனுமதிக்கப்டல் வேண்டும்.அனைத்து விரைவு ரெயில் வண்டிகளிலும் முன்பதிவு செய்யப்படாத பயணிகள் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட் பயணிகள் பயணிக்க ஏதுவாக சாதாரண பெட்டிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், எழும்பூரிலிருந்து மும்பை தாதருக்கு தினமும் சென்று கொண்டிருக்கும் விரைவு வண்டியை அரக்கோணம் சந்திப்பில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்படல் வேண்டும், அரக்கோணத்திலிருந்து ஜோலார்பேட்டைக்கு மாலையில் இயக்கப்படும்  மெமூ மின்தொடரை சித்தேரி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்,  இச்சிபுத்தூர் ரெயில் நிலையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்திருந்தனர். தொடர்ந்து சென்னை கோட்ட  ரெயில்வே மேலாளர் கணேஷ்  ரெயில் நிலைய நடைமேடை 2 மற்றும் 3, ரெயில்வே காவல் நிலைய கட்டிடம், சிக்னல் அறை, ரயில் கட்டுபாட்டு அறை, ரெயில் ஒட்டுனர்கள், கார்டுகள் ஒய்வறைகளை பார்வையிட்டார்.

பின்னர் தெற்கு ரெயில்வே ரெயில்வே மருத்துவமனையை பார்வையிட்டு மருத்துவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதனையடுத்து மேல்பாக்கம் துணை மின் நிலையத்தை பார்வையிட்டார். ஆய்வின்போது ரெயில்வேயின் துறை பல்வேறு துறைகளின் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்