மேல் விசாரத்தில் நாய்களை அப்புறப்படுத்த கோரிக்கை
தி நேஷனல் வெல்ஃபேர் அசோசியேஷன் நிர்வாகிகள் நேற்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்சன் புஷ்பரஜியை மாவட்ட அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தனர்
அந்த மனுவில் கூறியிருப்பதாவதுமேல்விசாரம் பகுதியில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது சாலைகளில் தெருக்களில் சுற்றித் திரியும் இந்த நாய்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அச்சத்தில் உள்ளனர்
இரவு நேரங்களில் வெளியே நடமாட முடியவில்லை மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன இதுவரைக்கும் பல பேர்களை கடித்திருக்கிறது சமீபத்தில் 2 நபர்களை கடித்துக் குதறியது எனவே நாய்களை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் கூறியுள்ளனர்.