தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கம் ஆர்ப்பாட்டம்

 


ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தினர் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் சுந்தரேசன் தலைமையில்  ஆர்ப்பாட்டம் செய்தனர்

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட தலைவர் சுந்தரேசன் பேசுகையில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில்

முடக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்கப்படும் என்றும் புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வந்து  நிறைவேற்றப்படும் என்றும் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை


 சமீபகாலத்தில் நடைபெற்ற தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான பட்ஜெட்  ஒதுக்கப்படவில்லை என்பது கண்டிக்கத்தக்கது எனவே தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் தமிழக அரசு நிறைவேற்றி தர வேண்டி வைக்கும் கோரிக்கை என்னவென்றால் முடக்கப்பட்ட அகவிலைப்படியை உடனடியாக வழங்கிடவேண்டும்

 பழைய  ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்து புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்  முழுமையடைந்த ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கிட வேண்டும் , குடும்பநல நிதி 50 ஆயிரம் என்பதை ஒரு லட்சமாக உயர்த்தி வழங்கிடவேண்டும், என்று  பேசி கோரிக்கை வைத்தனர்

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் டி.குப்பன் முன்னிலை வகித்தார், மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், ஜெய கோபி மாவட்ட துணைத் தலைவர் தேவராஜ், வட்ட  செயலாளர் ராமகிருஷ்ணன் ,

ஆர்.மோகன் மற்றும் வட்ட கிளை செயலாளர்கள்  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்