காவேரிப்பாக்கம் அருகே மாடு திருடிச் சென்ற வாலிபர் கைது
அவலூர் அடுத்த ராமாபுரம் சமத்துவபுரத்தில் வசித்துவரும் ஜனார்த்தனன் என்பவரின் பசுமாடு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக காணாமல் போனது இவர் அவலூர் காவல்நிலையத்தில் யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் என் பசுமாட்டை திருடிச் சென்று விட்டதாக புகார் அளித்தார் புகாரை பெற்றுக் கொண்ட அவளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்
விசாரணையின் அடிப்படையில் பனப்பாக்கம் அருந்ததியர் பாளையத்தை சேர்ந்த துருவன் என்பவரின் மகன் எழிலரசன் திருடிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் எழிலரசனை கைது செய்து விசாரித்தபோது மாடு திருடிச்சென்றது தெரியவந்தது மாட்டை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர் மேலும் அவலூர் போலீசார் இவர் மீது வழக்குப்பதிவு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.