ஜெயபாரத் அம்பேத்கர் இரவு பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
ராணிப்பேட்டை காரை பகுதியில் ஜெயபாரத் அம்பேத்கர் இரவு பள்ளி செயல்பட்டு வருகிறது
இந்தப் பள்ளியில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஜெயபாரத் நண்பர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார்
தேசியக் கொடியேற்றி வைத்து பேசுகையில் ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் கோடி முக்கியமானது அது நம் இந்திய நாட்டிற்கும் பொருந்தும் நமது தேசியக் கொடியை மூவர்ணக்கொடி என்று அழைக்கின்றனர் மூவண்ணக் கொடியில் வண்ணங்களின் முக்கியத்துவத்தை நாம் அறிந்திருக்க வேண்டும்
இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தின் அடையாளம் தான் மூவர்ணக்கொடி காவி, வெள்ளை, பச்சை வர்ணங்களுடன் நடுவில் நீல நிறத்திலான அசோகச் சக்கரம் இருக்கின்றது காவி நிறம் பலத்தையும் தைரியத்தையும் குறைக்கிறது,
வெள்ளை நிறம் அமைதியையும் உண்மையையும் குறிக்கிறது, பச்சை நிறம் வளர்ச்சி, பசுமையையும் மற்றும் விவசாயத்தையும் குறிக்கிறது, அசோகச் சக்கரம் இருபத்தி நான்கு ஆரங்களை கொண்டது இது தர்மம் காக்கப்படவேண்டும் என்ற வகையில் அமைந்திருக்கிறது என்று பேசினார்
அதனைத் தொடர்ந்து இனிப்பு வழங்கி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள்,ஊர் பெரியோர்கள் வாலிபர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்