பேக்கரியில் தாக்குதல் நடத்திய இளைஞர் கும்பல்: வாங்கிய பொருளுக்கு பணம் கேட்டதால் விபரீதம்…அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

 


கோவை: பீளமேடு அருகே பேக்கரி ஒன்றில் 6 பேர் கொண்ட இளைஞர் கும்பல் தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு ஆஞ்சநேயர் கோவில் எதிரே மகாராஜா என்ற பேக்கரி செயல்பட்டு வருகிறது. இந்த பேக்கரிக்கு வந்த இளைஞர் ஒருவர் குளிர்பானம் கேட்டுள்ளார். அப்போது கடைக்காரர் குளிர் பணத்திற்கான பணத்தை கேட்டுள்ளார்.


அதற்கு அந்த வாலிபர் “நாங்கள் ஓடியா விடுவோம் பணம் தருவோம்” என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பணம் கொடுத்து குளிர்பானத்தை வாங்கிச் சென்றார். மேலும், அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் தனது நண்பர்களுடன் மது அருந்திய அந்த இளைஞர் சிறிது நேரம் கழித்து மீண்டும் 6 பேர் கொண்ட கும்பலுன் பேக்கரிக்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற அந்த கும்பல் கடையில் பணியில் இருந்த செல்வின் ராஜ், மணிகண்டன் ஆகிய ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில்கடை ஊழியர்கள் அனைவரையும் தாக்கி கடையை அடித்து உடைத்துள்ளது அந்த கும்பஇதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த பேக்கரியில் தாக்குதல் நடத்திய இசக்கிமுத்து (23), கௌதம்(22), அருள்நந்தி (22), தினேஷ் (21), மணி (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் மேலும், 16 வயது சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தசூழலில், பேக்கரியில் தாக்குதல் நடந்த சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு