கே.டி.ராகவனின் சர்ச்சை வீடியோ.. உண்மை பின்னணி என்ன?

 


தமிழக பாஜகவின் மாநிலப் பொதுச் செயலாளரான கேடி ராகவன் மீதான பாலியல் ரீதியிலான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேடி ராகவன் மீதான பாலியல் வீடியோவின் முழுப் பின்னணி என்ன?

பாஜகவின் மூத்த தலைவர்களில் மிஸ்டர் கிளீன் என்று சொல்லப்படுபவர் வழக்கறிஞரான கேடி ராகவன், இவர் தான் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். கட்சித் தலைமையின் ஒப்புதலோடு தான் சர்ச்சை வீடியோ வெளியானதா? நடந்தது என்ன?

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப் பெருமாள் கோவிலைச் சேர்ந்தவர் 45 வயதான கேடி ராகவன். வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டுள்ள இவர், தமிழக பாஜகவில் மாநிலப் பொதுச் செயலாளராக உள்ளார்1999ம் ஆண்டு செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி, 2006ம் ஆண்டு காஞ்சிபுரம் தொகுதி, 2011ம் ஆண்டு செங்கல்பட்டு தொகுதி மற்றும் 2016ம் ஆண்டு கொளத்துார் சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டவர்.

இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனத்தில் பணியாற்றுபவரும், பாஜக உறுப்பினருமான மதன் ரவிச்சந்திரன் என்பவர், செவ்வாய்க்கிழமை அன்று தனது யூடியூப் சேனலில் கேடி ராகவன் பற்றிய சர்ச்சைக்குரி்ய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில், கே.டி ராகவன் பாஜகவின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் செல்போனில் வீடீயோ காலில் பேசுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன

சட்டையின்றி வீட்டில் கேடி ராகவன் இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் ஆபாசமான செய்கைகளிலும் ஈடுபடுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன், பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலோடு தான் வீடியோவை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பாஜகவில் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண்களைப் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்குவதை அம்பலப்படுத்துவதற்காகத் தான் வீடியோ வெளியிடப்பட்டதாக, அதன் தயாரிப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள வெண்பா கீதாயன் என்பவரும் தெரிவித்துள்ளார். வீடியோவின் இறுதியில், சமீபத்தில் சிறுமியரை பாலியல் வன்புணர்வு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள சாமியார் சிவசங்கர் பாபா குறித்தும் சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன

சிவசங்கர் பாபா விவகாரத்தில், அவர் நடத்தி வந்த சம்ரட்சணா அமைப்பின் தலைவராக இருந்த ஜானகி என்பவருக்கும் கே.டி ராகவனுக்கும் தொடர்பு இருப்பதாக ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. சமீபத்தில் சிவசங்கர் பாபா அறநெறி இயக்கத்தைச் சேர்ந்த நடிகர் சண்முகராஜா, செய்தியாளர்களைச் சந்தித்து அளித்த பேட்டியில், கே.டி ராகவன் தனது அடியாட்களுடன் பாபாவின் வளாகத்தில் புகுந்திருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.அதனால், தங்களுக்கு ஏதாவது பிரச்னையோ பாதிப்போ ஏற்பட்டால், அதற்கு பாஜக மற்றும் திமுக ஆகிய கட்சிகளும் கேடி ராகவனும் தான் காரணம் என வீடியோ வெளியிட்டவர்கள் கூறியுள்ளனர்

இந்த வீடியோ தொடர்பாக அரசியல்வாதிகள் தங்களை மிரட்டினால், அவர்கள் தொடர்பான வீடியோக்களும் வெளியிடப்படும் என வீடியோ வெளியிட்டவர்கள் தெரிவித்துள்ளனர். வீடியோ வெளியானதை அடுத்து பாஜக வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வீடியோ குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு சார்பில் கே,டி. ராகவனிடம் கேட்ட போது, வீடியோவுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து வீடியோ குறித்து விவாதித்ததாகவும் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் கேடி ராகவன் சமூக வலைதளங்களில் தகவல் வெளியிட்டுள்ளார. இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கட்சியின் சார்பில் விசாரணைக்குழு அமைத்து இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் விஏடி கலிவரதன், மகளிர் அணித் தலைவராக இருந்த ஒரு பெண்ணிடம் 5 லட்சம் ரூபாய் பறி்த்துக் கொண்டு, அவரைப் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக செய்திகள் வெளியாகின

பாதிக்கப்பட்ட பெண்ணே, செய்தியாளர்களை சந்தித்து பேட்டிகளும் அளித்திருந்தார் அப்போது பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த எல். முருகன் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தவில்லை என்றும் கலிவரதனைக் காப்பாற்ற முயல்கிறார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலைமையில், பாஜகவின் மாநிலப் பொதுச் செயலாளரான கே.டி ராகவனின் வீடியோ வெளியானது கட்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டுகள் எல்லாக் கட்சிகளிலும் சர்வ சாதாரணமாகி விட்ட நிலையில் பாஜக இந்தப் பிரச்னையை எப்படி எதிர்கொள்ளப் போகிறதுபொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்