கலவை கூட்டு ரோடு, கிருஷ்ணா கட்டைக்கூத்து நாடக மன்றம் சார்பாக கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வாழ்து


 ஆற்காடு அடுத்த கலவை கூட்டு ரோட்டில்  கிருஷ்ணா கட்டை கூத்து நாடக மன்றம்செயல்பட்டு வருகிறது இந்த நாடக மன்றத்தின் மூலமாக பழைய பாரம்பரிய பாரதக் கதைகள் மற்றும் புராணக் கதைகளை  பல ஆண்டுகளாக பல்வேறு இடங்களுக்குச் சென்று  நாடகமாக நடித்து வருகின்றனர்

இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக, நாடக நிகழ்ச்சிகள் நடைபெறாத நிலையில்

 கிருஷ்ணா கட்டை கூத்து நாடக கலைஞர்கள் காற்றாடி தொண்டு நிறுவனத்துடன் இணைந்து  ஊர் ஊராகச் சென்று வேடமிட்டு நோய் தொற்றின் அபாயத்தை  குறித்து விழிப்புணர்வு நாடகங்களை நடத்தி வருகின்றனர்.

அந்த வரிசையில் கலவை அடுத்த நாகலேரி கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளோடு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டிய அவசியத்தைக் குறித்து நாடகம் நடத்தினர் இவர்களின் கலை நிகழ்ச்சியை போற்றும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஆற்காடு தொகுதி துணை செயலாளர் நாகலேரி சிவா தலைமையிலான விடுதலை சிறுத்தைகள்  அவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்து கூறி உற்சாகப்படுத்தினர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)