ராணிபேட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் அரக்கோணம் ரோட்டரி சங்கம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கார் பேரணி

 


ராணிபேட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் அரக்கோணம் ரோட்டரி சங்கம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு  விழிப்புணர்வு கார் பேரணி நடைபெற்றது. அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் இருந்து  துவங்கி ராணிபேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரையில் சென்றனர்.  ரோட்டரி சங்க தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார் செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். அரக்கோணம் உதவி கலெக்டர் சிவதாஸ், அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்திகணேஷ் தாசில்தார் பழனிராஜன் ஆகியோர் கார் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.பேரணியாக சென்ற கார்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு  விழிப்புணர்வு குறித்து வாசகங்கள் ஒட்டப்பட்டும் பொது மக்களுக்கு சாலைகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் சென்றனர். இப் பேரணியில் ரோட்டரி துணை ஆளுநர் எஸ். செந்தில் குமார், ரோட்டரி முன்னாள் துணை ஆளுநர் டி. எஸ். ரவிக்குமார்,கே பி கே பிரபாகரன்,வெங்கடாசலபதி, பி.மனோகர்பிரபு, டாக்டர். அசோக்குமார், வடிவேலன், வெங்கடேஷ் மற்றும் குணசேகரன் உள்ளிட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.