பணத்துக்கு ஆசைப்பட்டு மாணவிகளின் வாழ்வாதாரத்தை பாழாக்கிய கடலூர் தனியார் பள்ளி


 கடலூர் புதுநகர் காவல் நிலையம் அருகே சென்டன்ஸ் CBSCபள்ளியில் அப்ரூவல் உள்ளதாக 2019 ஆண்டு  மாணவர்களை பள்ளியில் சேர்த்துள்ளனர் CBSC பள்ளியில்படிப்பதற்கான தொகையைக் கட்டி படித்த பெண் மாணவர்களுக்கு  2021 ஆண்டு SSLC தேர்வு கடலூர் செண்டென்ஸ் பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அதே பள்ளியில் டென்த் மார்க் வழங்காமல் வேற ஒரு விருத்தாசலத்தைச் சேர்ந்த தனியார் பள்ளியில்   டென்த் மார்க் வழங்கியுள்ளதாகவும் அதில் குறைந்த மார்க் வழங்கியுள்ளதாகவும் சென்டன்ஸ் பள்ளியில் பயிலும் மாணவிகளின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை முற்றுகையிட்டனர்.

 அப்போது செய்தியாளரிடம் கூறிய பெற்றோர்கள் கடலூர் சென்டன்ஸ் CBSC பள்ளியில் 28 பிள்ளைகள் தேர்வு எழுதியுள்ளனர் அப்போது பள்ளி நிர்வாகம் பிள்ளைகள் அனைவரும் நல்ல மார்க் எடுத்திருப்பதாக பெற்றோரிடம் குறுஞ்செய்தியாக மொபைலில் தெரிவித்துள்ளனர் 


பின்பு மார்க் லிஸ்ட் வந்தவுடன்   இதில் இரண்டு பிள்ளைகளுக்கு மட்டும் கூடுதல் மார்க் வழங்கி உள்ளதாகவும் அந்த பிள்ளைகள்  கிறிஸ்துவ சமுதாயத்தைச் சேர்ந்த மாணவி என்றும் அதனால் மார்க் கூடுதலாக இரண்டு மாணவிகளுக்கு மட்டும் வழங்கியதாகவும் மீதி 26 மாணவிகளுக்கு மிகவும் கம்மியாக மார்க் வழங்கியதாகவும் இதற்குக் காரணம் CBSC அப்ரூவல் இல்லாததால் மற்றொரு ஸ்கூலில் மார்க் வழங்கப்பட்டதாகவும்

பாதிக்கப்பட்ட  மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை முற்றுகையிட்டு தக்க பதில் தரவில்லை என்றால் சாலைமறியல் முற்றுகை இருப்போம் என்று பள்ளி நிர்வாகத்திடம் காரசாரமாக விவாதம் நடத்தினர் இதை அறிந்த புதுநகர் காவல்துறையினர் பெற்றோர்களை சமாதானம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்து உள்ளார்.

 


பள்ளி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு ஏற்ற மார்க் வழங்க வேண்டும் இல்லையெனில் மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் கடுமையாக எச்சரிக்கை விடுவித்தனர்  இதனால்  கடலூர் லாரன்ஸ் சாலை புது நகர் காவல் நிலையம் அருகே சென்டன்ஸ் SBSC  பள்ளி நிர்வாகம் மிகவும் அதிர்ச்சியில் உள்ளது இப்பிரச்சனையை அறிந்த செய்தியாளர் பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்தபோது 2021 ஆண்டு தான் SBSE அப்ரூவல் தற்பொழுது கிடைத்துள்ளதாக ஆதாரப்பூர்வமாக தெரிவித்தனர். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக CBSC ஸ்கூல் கான தொகையினை பள்ளி நிர்வாகம் மாணவிகளின் பெற்றோர்களிடம் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 இத்தனை ஆண்டுகள் கொரானாவில் கடுமையாக பாதிக்கப்பட்டு தன் பிள்ளைகளை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று பெற்றோர்கள் பணத்தை தனியார் பள்ளி இடம் வாரி இழக்கின்றனர் இதனை பயன்படுத்தி பெரும் தொகையைப் பார்த்து வருகின்றனர்.


இதுபோன்ற பள்ளி நிர்வாகத்தை CEOஅதிகாரிகள் உரிய ஆய்வு செய்து  நடவடிக்கைகளை மேற்கொண்டு மாணவர்களின் எதிர்காலத்தை வலுப்படுத்த வேண்டும் என்று மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மீண்டும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்வோம் என கடும் எச்சரிக்கை விடுத்து சென்றனர் மாணவிகளின் பெற்றோர் இதனால் கடலூர் CBSE சென்டன்ஸ் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)