காவேரிப்பாக்கம் தேர்வுநிலை பேரூராட்சி சார்பாக கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்
கொரோனா நோய்தொற்று இரண்டாம் அலையை கடந்த நிலையில் இந்தியாவில் பல்லாயிரக் கணக்கான ஜனங்கள் இருந்தனர் மூன்றாம் அலை தொடர அதிக வாய்ப்புள்ளதால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது இதனடிப்படையில் காவேரிப்பாக்கம் தேர்வுநிலை பேரூராட்சியில், பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் காவேரிப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் இளங்கோவன்,நகராட்சி மேற்பார்வையாளர் பன்னீர்மற்றும்
பேரூராட்சி ஊழியர்கள், சுகாதாரத் துறை சார்ந்த ஊழியர்கள் இணைந்து கொரோனா விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரம் கையிலேந்தி காவேரிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் தொடங்கி பஜார் முழுவதும்,வீதி, வீதியாகச் சென்று விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.
வணிகர்களுக்கு கை கழுவுதல், முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், நோய் எதிர்ப்பு சக்திக்குறிய ஆகாரம் உண்ணுதல் போன்றவற்றின் அவசியத்தை எடுத்துக் கூறினர்.மேலும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தினர்
மீறும் பட்சத்தில் பேரூராட்சி நிர்வாகத்தால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர் இவர்களின்முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு பிரச்சாரத்தை சமூக ஆர்வலர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.