முகக்கவசம் அணியாத நபரை வெளுத்து வாங்கிய எஸ்.ஐ : காவல்துறையினருக்கு எதிராக குவியும் கண்டனம்!!!

 


முக கவசம் அணியாமல் வந்த நபரை கடுமையாக போலீஸ் எஸ்ஐ கடுமையாக தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஜெசரலா நகர காவல் நிலைய எஸ்.ஐ. முஹம்மது ஹனீப். கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவர் நகரின் பேருந்து நிலையம் பகுதியில் வாகனத் தணிக்கை மேற்கொண்டிருந்தார்.

அப்போது ஒரு நபர் பேருந்து நிலையத்திற்குள் முகக் கவசம் அணியாமல் சென்று கொண்டிருப்பதை கவனித்து எஸ்.ஐ முகமது ஹனீப் அவரை அழைத்து கடுமையாக தாக்கினார். இந்த காட்சியை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர்.

அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போலீஸ் எஸ்ஐ செயலுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொதுமக்கள் முக கவசம் அணியாமல் சுற்றும் நபர்களை இதுபோல் தண்டிப்பது தவறு கிடையாது என்று கூறுகின்றனர்.

அதே நேரத்தில் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பொதுமக்களை நேரடியாக தண்டிக்கும் அதிகாரத்தை போலீசாருக்கு யார் கொடுத்தது என பொதுமக்கள் எஸ்ஐ யின் செயலை கடிந்து வருகினற்னர்.